AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ayyanar Thunai: அய்யனார் துணை சீரியல் ரசிகர்களே இது உங்களுக்கு தெரியுமா? பிரபலங்களின் சம்பள விவரம் இதோ!

Ayyanar Thunai Serial Actors Salary: தமிழில் சினிமா அந்த அளவிற்கு மக்களை ஈர்க்கிறதோ அதுபோன்று, சின்னத்திரை சீரியலும் ஈர்க்கும். அந்த விதத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் டப்பில் உள்ள சீரியல்தான் அய்யனார் துணை. இந்த சீரியலில் நடிக்கும் முக்கிய பிரபலங்களின் சம்பள விவரம் குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

Ayyanar Thunai: அய்யனார் துணை சீரியல் ரசிகர்களே இது உங்களுக்கு தெரியுமா? பிரபலங்களின் சம்பள விவரம் இதோ!
அய்யனார் துணை சீரியல்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Feb 2026 16:35 PM IST

தமிழில் மக்கள் மத்தியில் சினிமாவை போலவே அதிக ஈர்ப்பை ஏற்படுத்திவருவது சின்னத்திரை சீரியல்கள். அதிலும் குறிப்பாக தமிழில் குறிப்பிட்ட ஒரு மூன்று தொலைக்காட்சிகள் முக்கிய இடங்களில் இருந்துவருகிறது. அது என்னவென்றால் சன் டிவி (Sun TV), விஜய் டிவி (Vijay TV) மற்றும் ஜீ தமிழ் (Zee Tamil). இந்த மூன்று தொலைக்காட்சிகளும் தற்போதுவரை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக இருந்துவருகிறது. அதிலும் மாலை 6 மணி ஆனால் அனைவரும் தொலைக்காட்சின் முன் அமர்ந்து சீரியல்கள் பார்ப்பது வழக்கமாக மாறிவிட்டது. அந்த விதத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பேமஸ் சீரியல்தான் “அய்யனார் துணை” (Ayyanar Thunai). இந்த சீரியலானது திங்கள் முதல் சனி கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. இந்த சீரியலானது விறுவிறுப்பாகவும், எதிர்பார்த்த டுவிஸ்ட் என பார்ப்பவர்களை அடுத்து என்ன நடக்கிறது என ஆர்வத்தை அதிகரித்துவருகிறது.

இந்த சீரியலானது 4 சகோதரர்களுக்கும் இருக்கும் பாசம், மகளாக இருக்கும் மருமகள் என வித்தியாசமான கதையில் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது. இந்த சீரியலில் உள்ள பிரபலங்களின் டெய்லி சம்பளம் எவ்வளவு தெரியுமா? அது குறித்த விவரங்கள் இதோ.

இதையும் படிங்க: தியேட்டரில் 50 நாட்களைக் கடந்த சிறை படம்… கொண்டாட்டத்தில் படக்குழு

அய்யனார் துணை சீரியல் பிரபலங்களின் சம்பள விவரங்கள் :

  • நடிகை மதுமிதா ஹிரனையா (நிலா சோழன்) இந்த தொடரில் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட ரூ 35,00 – ரூ40,000 வரை சம்பளமாக பெருகிறாராம்.
  • நடிகர் அரவிந்த் செய்ஜு (சோழன்) அய்யனார் துணை சீரியலில் நடிப்பதற்கு, ஒருநாளைக்கு ரூ 20,000 சம்பளமாக பெருகிறாராம்.
  • நடிகர் முனாஃப் ரஹ்மான் (சேரன்) இந்த தொடரில் ஒரு நாளைக்கு நடிப்பதற்கு ரூ 20,000 சம்பளமாக பெருகிறாராம்.
  • வி.ஜே. அருண் கார்த்தி (பாண்டியன்) இந்த தொடரில் ஒரு நாளில் நடிப்பதற்கு ரூ 12,000 சம்பளமாக பெருகிறாராம்.
  • மேலும் அய்யனார் சீரியலில் பல்லவனாக நடித்துவரும் பர்வேஸ் முஷாரஃப், இந்த தொடரில் நடிப்பதற்கு ஒருநாளைக்கு ரூ 10,000 சம்பளமாக பெருகிறாராம்.

இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்கும் அஜித் குமார் – இணையத்தில் பரவிவரும் பதிவு!

இந்த சீரியலில் அதிகம் சம்பளம் வாங்குபவராக நடிகை மதுமிதா ஹிரனையா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அய்யனார் துணை சீரியலின் புரோமோ குறித்த வீடியோ :

இந்த அய்யனார் துணை சீரியலானது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி கிட்டத்தட்ட 1 ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த சீரியலின் மீது ரசிகர்களுக்கு அதிகம் ஈர்ப்பு உள்ளது. மேலும் விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்படும் மற்றும் டாப் TRP சீரியலில் இதுவும் உள்ளது.மேலும் இந்த சீரியல் வெறும் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் ஸ்தீம் செய்யப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. .

Follow Us