Anaswara Rajan: எங்க இருந்த இவ்வளவு நாள்?.. அனஸ்வரா ராஜனை பாராட்டிய ரஜினிகாந்த்!
Anaswara Rajan Share Emotional Post About Rajinikanth: அனஸ்வரா ராஜன் சமீபத்தில் வெளியான வித் லவ் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படக்குழு சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்திருந்த நிலையில், அதில் ரஜினிகாந்த் தன்னை பாராட்டியது குறித்து அனஸ்வரா ராஜன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் வித் லவ் (With Love). இந்த திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) கதாநாயகனாக நடித்திருந்தார். இவர் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற திரைப்படத்தில் இயக்குநர் ஆவார். இவர் அந்த படத்திலே சிறு வேடத்தில் நடித்து ரசிக்கப்பட்டிருந்தார். இவரின் 2வது படமாக அமைந்ததுதான் வித் லவ். இப்படத்தை சௌந்தரா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரிக்க, அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்கியிருந்தார். இந்த படமானது பள்ளிப்பருவ காதல் குறித்த கதைக்களத்தில் அமைந்திருந்தது. இப்படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்திருந்தார். இப்படத்தின் மூலமாகத்தான் லீட் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் இதற்கு முன் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார்.
அந்த விதத்தில் வித் லவ் படக்குழுவினருடன் நடிகை அனஸ்வரா ராஜனும் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பின்போது, ரஜினிகாந்த் தன்னை பாராட்டியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: கதை ரெடி… அடுத்து டைரக்ஷன் தான் – சசிகுமார் கொடுத்த மாஸ் அப்டேட்
நடிகை அனஸ்வரா ராஜன் மற்றும் ரஜினிகாந்த் இருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
அந்த பதிவில் தனது மகிழ்ச்சியை தெரிவித்த அனஸ்வரா ராஜன், “பிரியமுடன் தலைவர், அவரை நேரில் சந்தித்தபோது என்னிடம் “எங்க இருந்த இவ்வளவு நாள் ?” என கேட்டபோது அந்த தருணம் நிறைவாக இருந்தது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை அனஸ்வரா ராஜனின் புது தமிழ் திரைப்படம் :
நடிகை அனஸ்வரா ராஜன், தமிழில் 2022ம் ஆண்டில் திரிஷாவின் நடிப்பில் வெளியான ராங்கி என்ற படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து தமிழில் நுழைந்தார். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் பெரிதாக வரவேற்கப்படவில்லை. இதன் பின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடிப்பதை தொடர்ந்தவந்தார். அதில் தெலுங்கில் சாம்பியன் மற்றும் தமிழில் வித் லவ் போன்ற படங்களில் நடித்து லீட் கதாநாயகியாக பிரபலமாகியுள்ளார்.
இதையும் படிங்க: சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
இதில் வித் லவ் படமானது இவருக்கு தமிழ் மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துவருகிறது. இதையடுத்து இவர் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார். இதன் ஷட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.