Anaswara Rajan: எனது வாழ்க்கையிலே ஒரே நாளில் ஓகே சொன்ன படம் இதுதான்- அனஸ்வரா ராஜன் பேச்சு!
Anaswara Rajan About With Love Movie: மலையாள சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ், மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் இளம் கதாநாயகியாக கலக்கிவருபவர் அனஸ்வரா ராஜன். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், கதையை கேட்டு ஒரே நாளில் ஓகே சொன்ன திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan). மலையாள நடிகையான இவர் ஆரம்பத்தில் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்தார். இவரின் நடிப்பில் வெளியான படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. மேலும் இவரின் நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான ரேகாசித்திரம் (Rekhachithram) என்ற படமானது இவருக்கு தென்னிந்திய மக்களிடையே பிரபலத்தை கொடுத்தது. அதிரடி திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். இவர் தமிழில் முதல் முறையாக கடந்த 2022ம் ஆண்டில் திரிஷாவின் (trisha) நடிப்பில் வெளியான ராங்கி (Raangi) என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள படம்தான் வித் லவ் (With Love).
இந்த படத்தில் இயக்குநரும், தற்போது நடிகராக வலம்வரும் அபிஷன் ஜீவிந்திற்கு (Abhishan Jeevinth) ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் மதன் இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இப்படம் 2026 பிப்ரவரி 6ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனஸ்வரா ராஜன், இப்படத்திற்கு எவ்வாறு ஓகே சொன்னது குறித்து பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: தனுஷின் டி55 படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வித் லவ் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது குறித்து அனஸ்வரா ராஜன் பேச்சு:
சமீபத்தில் பேசிய நேர்காணல் ஒன்றில் நடிகை அனஸ்வரா ராஜன், “எனது வாழ்க்கையிலே இதுவரைக்கும் நான், கதையை கேட்டு, எதுவுமே யோசிக்காமல் ஒரே நாளில் ஓகே சொன்ன திரைப்படம் வித் லவ் படம்தான். ஏனென்றால் இந்த படத்தின் கதையை இயக்குநர் மதன் சொன்ன விதம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அவரு இந்த படத்தின் கதையை சொல்ல சொல்ல ரொம்பவே நன்றாக இருந்தது. இந்த கதையை அவர் சொல்லும்போது நிறைய சிரிச்சோம்.
இதையும் படிங்க: 2016 முதல் 2022.. சிறந்த நடிகர் – நடிகைகள் யார்? தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, நான் பார்க்கும்போது இப்படம் ஒரு க்யூட்டான லவ் ஸ்டோரி-னு நான் ஃபீல் பண்ணேன். இப்படத்தை அன்புடன் செய்திருக்கிறோம், அன்புடனே கொடுக்கிறோம் . மேலும் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு அன்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
வித் லவ் படம் குறித்து நடிகை அனஸ்வரா ராஜன் பேசிய வீடியோ பதிவு:
“In my career, #WithLove was the only film which i agreed to do on Day-1 of narration, without thinking anything🔥. It’s a cute story with so much fun. I’ve watched the film, it’s nice love story. We have made WithLove & giving WithLove♥️”
– #AnaswaraRajanpic.twitter.com/pOIqz3pmQM— AmuthaBharathi (@CinemaWithAB) January 30, 2026
இந்த வித் லவ் படமானது காதல், எமோஷனல் மற்றும் நகைச்சுவை கதைக்களத்துடன் தயாராகியுள்ளது. இப்படமானது கடந்த 2025ம் ஆனது இறுதியிலே தயாரான நிலையில், 2026ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதியில் வெளியாகவுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று 2026 ஜனவரி 30ம் தேதியில் வெளியாகிறது.