Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷின் டி55 படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

D55 Music Director Update: நடிகர் தனுஷின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் தனுஷ் இணைந்துள்ள படம்தான் டி55. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தனுஷின் டி55 படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டி55 பட இசையமைப்பாளர் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Jan 2026 17:07 PM IST

கடந்த 2024ம் ஆண்டில் வெளியான அமரன் (Amaran) என்ற படத்தின் மூலம் தென்னிந்திய மக்களிடையே பிரபலமான இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy). இவர் இதற்கு முன், ரங்கூன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படமானது அவருக்கு பெரியதாக வரவேற்பைக் கொடுக்கவில்லை. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) அமரன் பட வெற்றியை தொடர்ந்து தமிழில் இவர் இணைந்துள்ள புது நடிகர் தான் தனுஷ் (Dhanush). தனுஷின் 55வது படமாக இது டி55 (D55) என்று கடந்த 2025ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்த நிலையில், பட்ஜெட் காரணமாக இந்த தயாரிப்பு நிறுவனம் விலகிவிட்டது. இதையடுத்து இப்படத்தை தனுஷே தயாரிப்பதாகவும் அவருடன் ஆர்டேக் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் இணைந்துள்ளது. இதன் அறிவிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் நடித்துவந்த டி 54 படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிலையில், விரைவில் ராஜ்குமார் பெரியசாமியின் டி55 படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு எந்த இசையமைப்பாளர் இசையமைக்கிறார் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷின் இந்த டி55 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சாய் அபயங்கர் மற்றும் தனுஷின் காம்போ முதல் முறையாக இணைந்துள்ள நிலையில், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: வசூலில் சக்கைபோடு போடும் ரீ ரிலீஸான மங்காத்தா படம் – எத்தனை கோடிகள் தெரியுமா?

தனுஷின் டி55 பட இசையமைப்பாளர் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :

தனுஷின் டி55 படத்தின் கதாநாயகி யார் :

இந்த டி55 படத்தில் தனுஷ் இதுவரை எந்த படத்திலும் நடிக்காத வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படமானது முற்றிலும் ஆக்ஷன் மற்றும் அதிரடி காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாகவுள்ளதாம். அமரன் படத்தின் வெற்றிக்கு பின் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் எந்த படம் உருவாகவுள்ளது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த் டி55 படமானது முற்றிலும் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளதாம். இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் அல்லது சாய் பல்லவி நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘தாய் கிழவி’ பட ராதிகாவின் கதாபாத்திரம் – மேக்கிங் வீடியோ வெளியீடு!

மேலும் இதில் பான் இந்திய பிரபலங்களும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஒரு பான் இந்திய படமாக இது அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் 2026 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என கூறப்படும் நிலையில், இப்படம் 2027ம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியாகி அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.