Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

STR ஃபேன்… இணையத்தில் வைரலாகும் பூக்கி படத்தின் 2-வது புரோமோ வீடியோ

Pookie Movie 2nd Promo Video: தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களின் படங்களின் வெளியீடு தற்போது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது நடிகர் அஜய் திஷன் நடிப்பில் உருவாகி உள்ள பூக்கி படத்தின் இரண்டாவது புரோமோ வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

STR ஃபேன்… இணையத்தில் வைரலாகும் பூக்கி படத்தின் 2-வது புரோமோ வீடியோ
பூக்கிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jan 2026 15:23 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. இவர் நாயகனாக நடிக்கும் பெரும்பான்மையான படங்களை அவரது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் தொடர்ந்து தயாரித்து வந்தது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்காமல் ஒரு படத்தை அவர்களது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது என்றால் அது பூக்கி படம் தான். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் அக்கா மகனான நடிகர் அஜய் திஷான் நாயகனாக நடித்துள்ளார். இவர் முன்னதாக நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த மார்கன் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கன் படத்தில் நடிகர் அஜய் திஷானின் நடிப்பைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டிய நிலையில் அவர் நாயகனாக நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியானது. இந்த 2கே கிட்ஸ்களிடம் மிகவும் பிரபலனாக பூக்கி என்ற வார்த்தையை படத்தின் பெயராக வைத்துள்ளனர். மேலும் இன்றைய இளைஞர்களின் காதல் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்தப் படத்தில் தெளிவாக பேசியுள்ளனர் என்பது படத்தின் வீடியோக்களைப் பார்க்கும் போது தெரிகிறது.

பூக்கி படத்திலிருந்து வெளியானது 2-வது புரோமோ வீடியோ:

அதன்படி இந்த பூக்கி படத்தை இயக்குநர் கணேஷ் சந்திரா எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் அஜய் திஷான் உடன் இணைந்து நடிகர்கள் ஆர்.கே. தனுஷா, பாண்டியராஜன், லட்சுமி மஞ்சு, மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற 13-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் இருந்து தற்போது படக்குழு இரண்டாவது புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Soundarya Rajinikanth: கோச்சடையான் போன்ற அனிமேஷன் படம் வருமா?- சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

பூக்கி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநர் சங்கரின் வேள்பாரி படம் குறித்து வைரலாகும் முக்கிய அப்டேட்!