Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Soundarya Rajinikanth: கோச்சடையான் போன்ற அனிமேஷன் படம் வருமா?- சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

Soundarya Rajinikanth About Animated Movie: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2வது மகள்தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தயாரிப்பாளராக படங்களை தயாரித்துவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவர் அனிமேஷன் படங்களை எடுக்க ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Soundarya Rajinikanth: கோச்சடையான் போன்ற அனிமேஷன் படம் வருமா?- சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!
சௌந்தர்யா ரஜினிகாந்த்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Jan 2026 18:01 PM IST

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக புது புது திரைப்படங்களைக் கொடுத்துவருபவர் சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth). இவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்(Rajinikanth) 2வது மகள் என அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துவருகிறார். இவரின் தயாரிப்பிலும், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) நடிப்பிலும் தமிழில் தயாராகியுள்ள படம்தான் வித் லவ் (With Love). இந்த படமானது வித்தியாசமா கதைக்களத்தில் தயாராகிவந்த நிலையில், கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்போது பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் (Kochadaiiyaan) போன்ற அனிமேஷன் படம் எடுப்பதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் பேசியதை விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: நான் ஹீரோவா நடிக்க முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

அனிமேஷன் படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு :

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்திடம், “கோச்சடையான் போன்ற படங்களை இப்போது எதிர்பாரக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், “அந்த மாதிரியான படத்தய் எடுப்பதற்கு எனக்கு மிகவும் ஆர்வம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு, அதுபோன்ற சிறந்த தொழில்நுட்பம் பயன்பாடு நம்மிடம் இல்லை. ஆனால் அதுபோன்ற படத்தை எடுப்பதில் இருந் ஆர்வம் குறையவில்லை.ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இதுபோன்று அனிமேஷன் படங்கள் மிக சிறப்பாகவே செயல்படுகின்றன.

இதையும் படிங்க: வா வாத்தியார் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்

இந்தியாவிலும் சமீபத்தில் மகாவதார் நரசிம்மா படமானது புதிய சாதனையை படைத்திருந்தது. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற அனிமேஷன் படங்கள் இன்னும் வரும் என நம்புகிறேன், தற்போதுள்ள சூழ்நிலை அதெல்லத்திற்கும் சாதகமாகத்தான் உள்ளது” என அந்த நேர்காணலில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த வித் லவ் படமானது மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இதில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்க, மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடடதக்கது.