Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கிராஃபிக்ஸ் – அனிமேஷன் மீது ஆர்வம் வர அதுதான் காரணம்… சௌந்தர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்

Soundarya Rajinikanth: உலக அளவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது பேட்டி ஒன்றில் பேசியபோது கிராஃபிஸ்க் மற்றும் அனிமேஷன் மீது தனக்கு எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

கிராஃபிக்ஸ் – அனிமேஷன் மீது ஆர்வம் வர அதுதான் காரணம்… சௌந்தர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்
ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jan 2026 15:46 PM IST

உலக அளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. 75 வயதைக் கடந்தும் தொடர்ந்து நடிப்பிற்கு ப்ரேக் கொடுக்காமல் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராகவும், இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகி உள்ள வித் லவ் படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி வித் லவ் படம் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் மதன் இயக்கி உள்ள நிலையில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். வித் லவ் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதபடி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த் தனக்கு கிராஃபிக்ஸ் மற்றும் அனிமேஷன்  மீது எப்படி ஆர்வம் வந்தது என்று தெரிவித்துள்ளார்.

கிராஃபிக்ஸ் – அனிமேஷன் மீது ஆர்வம் வர அதுதான் காரணம்:

அதன்படி சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது, நான் பள்ளியில் படிக்கும்போது, ​​என் நோட்டுப் புத்தகத்தில் ஏதாவது வரைந்துகொண்டே இருப்பேன். அதைப் பார்த்து என் அம்மா மகிழ்ச்சியடைவார். என் அப்பா ‘வள்ளி’ திரைப்படத்தை இயக்கியபோது, ​​நான் இன்னும் பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள், நான் வீட்டில் மஞ்சள் வண்ணக் கிரேயானால் ‘வள்ளி’ என்று எழுதியிருந்ததை அவர் கவனித்து ஆச்சரியப்பட்டார். அது மஞ்சள் மற்றும் குங்குமத்தின் உணர்வைத் தருவதாக அவர் கூறினார். அதுவே அந்தப் படத்தின் முதல் தலைப்பு எழுத்துக்களானது. அப்படித்தான் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் மீதான என் காதல் தொடங்கியது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… வா வாத்தியார் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… எல்லாக் கதைகளுக்கும் வார்த்தைகள் தேவையில்லை… சில கதைகள் உணரப்படுவதற்காகவே படைக்கப்பட்டவை – வெளியானது மௌன படமான காந்தி டால்க்ஸ் படத்தின் ட்ரெய்லர்!