Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எல்லாக் கதைகளுக்கும் வார்த்தைகள் தேவையில்லை… சில கதைகள் உணரப்படுவதற்காகவே படைக்கப்பட்டவை – வெளியானது மௌன படமான காந்தி டால்க்ஸ் படத்தின் ட்ரெய்லர்!

Gandhi Talks Movie Trailer | தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் சினிமாவில் பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மௌனப் படம் ஒன்றை தற்போது காந்தி டால்க்ஸ் என்ற பெயரில் எடுத்துள்ளனர்.

எல்லாக் கதைகளுக்கும் வார்த்தைகள் தேவையில்லை… சில கதைகள் உணரப்படுவதற்காகவே படைக்கப்பட்டவை – வெளியானது மௌன படமான காந்தி டால்க்ஸ் படத்தின் ட்ரெய்லர்!
காந்தி டால்க்ஸ்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jan 2026 15:42 PM IST

சினிமாவில் ஒவ்வொரு துறையிலும் புதுப் புது டெக்னாலஜியைப் பயன்படுத்தி பல முயற்சிகளை செய்து வருகின்றனர். முன்னதாக சினிமா தொடங்கியபோது ஊமைப் படம் தான் எடுக்கப்பட்டு ஒளிபரப்பபப்ட்டது. அதனைத் தொடர்ந்து கருப்பு வெள்ளை படங்களும் தொடர்ந்து கலர் படம் என்று அடுத்தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமா உயர்ந்துகொண்டே போனது. அதன்படி சினிமா ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருப்பது மட்டும் இன்றி தொடர்ந்து தொழில்நுட்பத்தை பயன்படித்து பல விசயங்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது புதிதாக ஒரு முயற்சியை எடுத்துள்ளனர். அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து மௌனப் படம் ஒன்றை எடுத்துள்ளனர். மேலும் இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இந்தப் படட்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் கிஷோர் பாண்டுரங் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வெளியானது மௌன படமான காந்தி டால்க்ஸ் படத்தின் ட்ரெய்லர்:

இந்த காந்தி டால்க்ஸ் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ், கியூரியஸ் மற்றும் மூவிமில் சார்பாக தயாரிப்பாளர்கள் உமேஷ் குமார் பன்சால், மீரா சோப்ரா, கிஷோர் பி பெலேகர் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் இந்த மௌனப் படம் வருகின்ற 30-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அனிமல் படத்தின் பார்ட் 2 எப்போது தொடங்கும் – நடிகர் ரன்பீர் கபூர் ஓபன் டாக்

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்தில் கேமியோ செய்துள்ள லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் விடீயோ