Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கியூடாக போஸ் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா? தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் இவர்!

Viral Celebrity Childhood Photo : நடிகர்கள் திரைத்துறையில் கிட்டத்தட்ட 20 மேலாக கதாநாயகனாகவே படங்களில் நடிக்கின்றனர். அந்த வகையில் அவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படம் வைரலாகிவரும் நிலையில், கீழே இருக்கும் இந்த புகைப்படத்தில் உள்ள சிறுவன் யார் என தெரிகிறதா. விவரமாக பார்க்கலாம்.

கியூடாக போஸ் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா? தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் இவர்!
பிரபல நடிகரின் சிறுவயது புகைப்படம்
Barath Murugan
Barath Murugan | Published: 24 Jan 2026 16:56 PM IST

தென்னிந்திய சினிமாவை (South Indian Cinema) பொறுத்தவரையில் நடிகர்கள் தங்களின் தாய் மொழி படங்களில் மட்டும் நடிக்காமல் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துவருகின்றனர். குறிப்பாக தமிழ் நடிகர்கள் தெலுங்கிலும், தெலுங்கு நடிகர்கள் தமிழிலும் என அவர்கள் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். அந்த விதத்தில் தென்னிந்திய பிரபலம் ஒருவரின் சிறுவயது கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது. இந்த புகைப்படத்தில் கியூட்டாக போஸ் கொடுக்கும் இந்த சிறுவன் யார் என தெரிகிறதா?. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தற்போது தென்னிந்திய பிரபல நாயகன் ஆவார். இவரின் தந்தை தமிழ் சினிமாவில் (Tamil Cinema) 80ஸ் மற்றும் 90ஸ் தொடக்கத்தில் முன்னணி நாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முருகர் வேடம் என்றாலே இந்த நடிகர்தான் முதலில் நினைவிற்கு வருவார். அவருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், அதில் மூத்த மகன்தான் இந்த சிறுவன். இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி இயக்குநர்களுடனும் படங்களில் நடித்துவருகிறார்.

மேலும் இந்த நடிகர் தனது உடன் நடித்த நடிகையே திருமணம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடி என்றாலே இவர்கள்தான் முதலிடம். இப்போது இந்த சிறுவன் யார் என தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அட இந்த சிறுவன் வேறுயாருமில்லை சூர்யாதான் (Suriya).

இதையும் படிங்க: எனக்கு அதன் மீது எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை – ஓபனாக பேசிய விஜய் சேதுபதி!

நடிகர் சூர்யா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by ISPL (@ispl_t10)

தமிழ் சினிமாவில் சூர்யா கடந்துவந்த பாதை :

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மீது ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் கொண்டிருந்தார். இவர் முதலில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ஆசை இன்ற படத்தில் நடிக்கவிருந்தார். கடந்த 1995ம் ஆண்டில் இப்படம் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சில காரணங்களால் இதில் அவர் நடிக்கவில்லை. அந்த விதத்தில் பின் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த 1997ல் வெளியான இதில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். ஆரம்பத்தில் சூர்யாவின் பெயர் சினிமாவில் சரவணன் என்றே இருந்தது. பின் ரத்னம் என்பவரால் சரவணன் என்ற பெயர் சூர்யா என்ற மேடை பெயராக மாற்றப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஆண்கள் அதற்கு மட்டும்தான்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை தபு!

இதன் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார். மேலும் முதல் முறையாக கடந்த 1999ம் ஆனதில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் மூலமாகவே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில், இதையடுத்ததாக தான், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டிருந்தனர். மேலும் சினிமாவில் கிட்டத்தட்ட 29 வருடங்களாக சூர்யா கதாநாயகனாகவே நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.