க்ரைம் த்ரில்லர் பாணியில் ஓடிடியில் வெளியான தடயம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Samuthirakani starring Thadayam web series review here: நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான தொடர் தடயம். இவரது நடிப்பில் முதன்முறையாக வெளியான இந்த இணையதள தொடர் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து படங்களை இயக்குவதில் இருந்து விலகி முழு நேரமாக நடித்து வருகிறார். தொடர்ந்து பலப் படங்களில் நடித்து வந்த நடிகர் சமுத்திரக்கனி தற்போது இணையதள தொடரிலும் நடித்து வருகிறார். அதன்படி இவர் அறிமுகம் ஆன இணையதள தொடர் தடயம். இந்த தொடர் தமிழ் மொழியில் உருவாகி உள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த தடயம் இணையதள தொடரை இயக்குநர் நவின்குமார் பழனி குமார் எழுதி இயக்கி உள்ளார். இந்த தொடர் நேரடியாக ஜீ 5 ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த தொடரில் நடிகர் சமுத்திரகனி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
அதன்படி இந்த இணையதள தொடரில் சமுத்திரக்கனி, ஷிவதா, ராஜ் திரன்தாஸ், மூணார் ரமேஷ், சுந்தரபாண்டியன், பிரேம், கொற்றவை, விசாகன், புலிப்பாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்ணா, மற்றும் தயாளன் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். இந்த தொடர் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான தடயம் சீரிஸ் எப்படி இருக்கு?
ஒவ்வொரு சைக்கோ கொலையாளிக்கும் அவர் அப்படி மாறியதற்கான ஒரு கதை இருக்கும். அப்படி இருக்கும் நிலையில் இந்த தடயம் இணையதள தொடரில் இரண்டு சைக்கோ கொலையாளிகள் உள்ளனர். ஆந்திரா – தமிழ்நாடு எல்லையில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.




இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக நடிகர் சமுத்திரக்கனி நடித்து இருப்பார். எவ்வளவு திறமை இருந்தாலும் சிலரின் சூழ்ச்சியால் பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் அந்த கொலை வழக்கில் சம்மந்தமான குற்றவாளிகளை அவரது மூத்த அதிகாரியான ஷிவதா உடன் இணைந்து விசாரிக்கிறார்.
விசாரணையில் அந்த கொலைகளை இரண்டு நபர்கள் சேர்ந்து செய்வதையும் அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. அதனைத் தொடர்ந்து தனக்கு கிடைக்கும் துப்பை வைத்து அந்த கொலைக் குற்றவாளிகளை இறுதியில் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே இந்த இணையதள தொடரின் கதை.
மொத்தம் 6 எபிசோடுகளை இந்த தடயம் தொடர் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. மேலும் இந்த தொடரின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான லீடையும் இயக்குநர் வைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் இன்வெஸ்டிகேசன் ஸ்டோரி பிடிக்கும் நபர்கள் இந்த தொடரை மிஸ் செய்யாமல் பாருங்கள்.
Also Read… Samantha: ஒரு நல்ல ஆண் மகனுக்கு எடுத்துக்காட்டே அந்த நடிகர்தான் – சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா?