AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தெறிக்கவிடும் தாய் கிழவி படம் – வைரலாகும் தகவல்

Thaai Kizhavi Movie Box Office Collection Update: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கும் முன்பு திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. இந்தப் படத்தின் பாஸ் ஆபிஸ் வசூல் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தெறிக்கவிடும் தாய் கிழவி படம் – வைரலாகும் தகவல்
தாய் கிழவி
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Mar 2026 12:24 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் எந்தவித பின்புலனும் இல்லாமல் வந்து தற்போது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பன்முகத் தன்மை உடையவராக உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல தயாரிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன் சார்பாக சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி.

நடிகை ராதிகா சர்த்குமார் முன்னணி வேடத்தில் நடித்து உள்ள இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படம் கடந்த 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூபாய் 50 கோடியை கடந்த தாய் கிழவி படம்:

அதன்படி படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலக அளவில் சுமார் ரூபாய் 50 கோடி ரூபாயை தாய் கிழவி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் படக்குழு இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… ரசிகர்களே தயாரா?.. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ பட ட்ரெய்லர்!

தாய் கிழவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்க்குழு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Follow Us