ரசிகர்களே தயாரா?.. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ பட ட்ரெய்லர்!
Dhurandar The Revenge Trailer: இந்தி சினிமாவில் சிறந்த நாயகனாக கலக்கிவருபவர் ரன்வீர் சிங். இவரின் நடிப்பில் கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் துரந்தர் 1 வெளியான நிலையில், அதையடுத்து துரந்தர் தி ரிவெஞ்ச் படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகனாக, தனது நடிப்பில் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களை கொடுத்துவருபவர் ரன்வீர் சிங் (Ranveer Singh). இதில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை சாரா அர்ஜுன் (Sara Arjun) நடித்திருந்த நிலையில், இந்தி மொழியில் வெளியாகியிருந்தது. அந்த வகையில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியாகியிருந்த படம்தான் துரந்தர் (Dhurandar). இதை இயக்குநர் ஆதித்ய தார் (Aditya Dhar) இயக்கியிருந்த நிலையில், ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படமானது பாகிஸ்தான் ஸ்பை திரில்லர் கதையை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான இந்த திரைப்படம், இந்தி மொழியையும் கடந்து பான் இந்திய வெற்றியை பெற்றிருந்தது. கிட்டத்தட்ட ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தின் ஷூட்டிங்கின்போதே பார்ட் 2 படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், பார்ட் 2 படமானது “துரந்தர் தி ரிவெஞ்ச்” (Dhurandar The Revenge) என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது.
இது வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், அதை முன்னிட்டு இன்று 2026 மார்ச் 07ம் தேதியில் இப்படத்தின் அதிரடி ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் ரன்வீர் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: டைம் லூப் டிடெக்டிக் த்ரில்லர் படத்தில் நடிக்கும் சந்தானம்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!
நடிகர் ரன்வீர் சிங் பகிர்ந்த துரந்தர் தி ரிவெஞ்ச் பட ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:
Told you it was personal . . .
Trailer Out Now
Book Now for Paid Previews on 18th March only.
🔗- https://t.co/xjI12DMQCm#DhurandharTheRevenge releases worldwide on 19 March, on Gudi Padwa, Ugadi, and Eid.
Hindi | Telugu | Tamil | Kannada | Malayalam @rampalarjun… pic.twitter.com/rvBfp0SKeZ
— Ranveer Singh (@RanveerOfficial) March 7, 2026
இந்த துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிகர்கள், சாரா அர்ஜுன், ஆர்.மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் துரந்தர் பார்ட் 1 படத்தின் தொடர்ச்சியாகவும், அதற்கு முன் நடந்த கதையை மையமாக கொண்டும் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ள நிலையில், பார்ட் 1 போலவே துரந்தர் 2 படத்தின் பாடல்களும் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் தம்பி திருமணத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் போட்டோ
துரந்தர் 1 படமானது சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், துரந்தர் 2 படமானது கிட்டத்தட்ட ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூலிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதியில், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.