AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டைம் லூப் டிடெக்டிக் த்ரில்லர் படத்தில் நடிக்கும் சந்தானம்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

Actor Santhanams 20th Movie Starts With Pooja: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

டைம் லூப் டிடெக்டிக் த்ரில்லர் படத்தில் நடிக்கும் சந்தானம்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!
சந்தானம் மற்றும் படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Mar 2026 11:37 AM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் சந்தானர். சின்னத்திரையில் பிரபலமாக இருந்த சந்தானம் வெள்ளித்திரையில் தனது நடிப்பை கடந்த 2002-ம் ஆண்டு முதல் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் நடிகர்கள் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, ரவி மோகன், சூர்யா, அஜித்குமார், விஜய், தனுஷ் மற்றும் ரவி மோகன் ஆகியோர் உடன் இணைந்து பலப் படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது காமெடி தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சந்தானம் பிறகு கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நாயகனாக நடித்து வருகிறார்.

அதன்படி தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து சந்தானத்தின் நாயகனாக நடித்து உள்ள படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி சந்தானம் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டைம் லூப் டிடெக்டிக் த்ரில்லர் படத்தில் நடிக்கும் சந்தானம்:

இந்த நிலையில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து உள்ள 20-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியது. அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படம் டைம் லூப் டிடெக்டிவ் த்ரில்லர் பாணியில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நாயகியாக நடிகை கோபிகா ரமேஷ் நாயகியாக நடித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Also Read… பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… உஸ்தாத் பகத் சிங் படத்தின் நியூ ரிலீஸ் தேதி இதோ

நடிகர் சந்தானம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தல இங்க! முண்டம் எங்க? விஜய் சேதுபதியின் காட்டான் படத்திலிருந்து வெளியானது நியூ போஸ்டர்

Follow Us