பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… உஸ்தாத் பகத் சிங் படத்தின் நியூ ரிலீஸ் தேதி இதோ
Pawan Kalyan's Ustad Bhagat Singh Movie Release Preponed Now: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள உஸ்தாத் பகத் சிங் என்ற படத்தில் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது மாற்றியுள்ளது.
தெலுங்கு சினிமா மற்றும் அரசியல் நடிப்பு என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் வெளியான படம் தே கால் ஹிம் ஓஜி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் உஸ்தாத் பகத் சிங். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் பவன் கல்யாணின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள உஸ்தாத் பகத் சிங் படத்தினை இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கி உள்ளார். இதில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஷி கண்ணா, அசுதோஷ் ராணா, நவாப் ஷா, ஆர்.பார்த்திபன், ராஜீவ் கனகலா, பி.எஸ். அவினாஷ், போசானி கிருஷ்ண முரளி, கௌதமி, சம்மக் சந்திரா, ரெடின் கிங்ஸ்லி, கிரி, நாக மகேஷ், நர்ரா ஸ்ரீனு, டெம்பர் வம்சி, பஞ்ச வைஷ்ணவ் தேஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.




பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு:
இந்த உஸ்தாத் பகத் சிங் படத்தினை முன்னதாக படக்குழு மார்ச் மாதம் 26-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு முன்னதாகவே மாற்றி அமைத்துள்ளது. அதன்படி உஸ்தாத் பகத் சிங் படம் வருகின்ற 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… தேர்தலுக்கு பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட திட்டமிடும் படக்குழு – வைரலாகும் தகவல்
உஸ்தாத் பகத் சிங் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
ఈ ఉగాదికి ఉస్తాద్ ఊచకోత 🔥🔥
Our USTAAD arrives a week early to spark Massive celebrations at the box office 💥#UstaadBhagatSingh GRAND RELEASE WORLDWIDE ON 19th MARCH, 2026.#UBSOnMarch19th
POWER STAR @PawanKalyan @harish2you @sreeleela14 #RaashiiKhanna @ThisIsDSP… pic.twitter.com/G6AoBLqxVq
— Mythri Movie Makers (@MythriOfficial) March 5, 2026