தலைவா அரசியல் படம் இல்லை – இயக்குநர் ஏ எல் விஜய்!
Director AL Vijay talks about Thalaivaa Movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.எல். விஜய். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான தலைவா படம் அரசியல் படம் இல்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 09-ம் தேதி 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தலைவா. இயக்குநர் ஏ.எ.விஜய் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அமலா பால் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், சந்தானம், ராகினி நந்தவானி, அபிமன்யு சிங், நாசர், ராஜீவ் பிள்ளை, என்.எல். சீனிவாசன், உதயா, தனு வித்யார்த்தி, பொன்வண்ணன், எம்.ஆர்.கிஷோர் குமார், ரேகா, சுரேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மனோபாலா, சுப்பு பஞ்சு, மதிவாணன் சக்திவேல், ரவி பிரகாஷ், வருண், சதீஷ் கிருஷ்ணன், கே. புஜ்ஜி பாபு, பிரபு, பூரன் கிரி, ராஜ் அர்ஜுன், ரஞ்சீவ் வர்மா, ஜப்பான் குமார், நிஷிகாந்த் தீட்சித், விஜய் வர்மா, ஸ்டண்ட் சில்வா, சாம் ஆண்டர்சன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்து இருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த தலைவா படம் குறித்து இயக்குநர் ஏ.எல். விஜய் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தலைவா அரசியல் படம் இல்லை என்று கூறிய ஏ.எல்.விஜய்:
தலைவா ஒரு அரசியல் சாராத படம். கதையில், சத்யராஜ் ஒரு ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தார், அவர் இறந்த பிறகு, தளபதி விஜய் அந்த ராஜ்ஜியத்தை எடுத்துக்கொள்கிறார், அது படத்தின் ஒரே ஒரு வரி, மக்கள் தலைவாவை ஒரு அரசியல் படமாக ஏன் முன்னிறுத்தினர் என்று எனக்குத் தெரியவில்லை. விஜய் சார் அரசியலில் நுழைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விஜய் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வரும்போது, அது உண்மையிலேயே ஒரு நல்ல விஷயம் என்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… தொடர்ந்து ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைப்பதற்கு என்ன காரணம்? அனிருத் விளக்கம்
இணையத்தில் வைரலாகும் ஏ.எல்.விஜய் பேச்சு:
#ALVijay about Thalaiva
– #Thalaiva is the title of the film and the tagline “Time to Lead” was suggested by my producer.
– Thalaiva is not a political film. The story is about #Vijay sir taking over Sathyaraj sir’s kingdom after him.#JanaNayaganpic.twitter.com/0NOUGMzawI— Movie Tamil (@_MovieTamil) March 3, 2026
Also Read… 3 நாட்களில் தாய் கிழவி படம் வசூலித்தது எத்தனை கோடிகள்? அப்டேட் இதோ



