AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND Vs WI போட்டியின் நேரடி ஒளிபரப்பில் கருப்பு பட அப்டேட் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

RJ Balaji talked about Karuppu movie during India vs West Indies cricket match live: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள கருப்பு படம் குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

IND Vs WI போட்டியின் நேரடி ஒளிபரப்பில் கருப்பு பட அப்டேட் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Mar 2026 12:07 PM IST

ரேடியோவில் ஆர்ஜே-வாக பணியாற்றி தமிழக மக்களிடையே பிரபலமானார் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தொடர்ந்து ரேடியோவில் ஆர்ஜேவாக பணியாற்றி வந்த நிலையில் பின்பு வெள்ளித்திரையில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி அதனைத் தொடர்ந்து கதைகளின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து அவரே படங்களை இயக்கி நாயகனாகவும் நடித்து வந்தார். இவர் நாயகனாக நடித்தப் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இவர் இயக்குநராக இயக்கிய கருப்பு படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்படி இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள நிலையில் வருகின்ற கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தொடர்ந்து கருப்பு படத்தின் பணிகளில் பிசியாக இருந்த இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது பணிகள் முடிவடைந்ததும் கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக தனது பணியை தொடங்கினார். அதன்படி நேற்று நடைப்பெற்ற இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையாளராக ஆர்.ஜே.பாலாஜி பங்கேற்றார். அப்போது கருப்பு படம் குறித்து அவர் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கருப்பு படத்திற்கு எந்த அப்டேட்டும் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி:

கருப்பு படம் தொடர்பாக என்னிடம் இப்போதைக்கு எந்த அப்டேட்டும் இல்லை. நீங்கள் ஒரு அப்டேட்டைக் கேட்டுவிட்டு, அடுத்த வேலைக்குச் செல்வீர்கள். ஆனால் எனக்கு, இது மட்டுமே எனது ஒரே வேலை. எனவே ஏதாவது உறுதியான விஷயம் இருந்தால், நான் நிச்சயமாக அதைப் பகிர்ந்து கொள்வேன் என்றும் ஆர்.ஜே.பாலாஜி இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பில் தெரிவித்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Toxic: யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு:

Also Read… Ajith Kumar: துபாயில் தாக்குதல்.. அஜித் குமாரின் நிலைமை என்ன? – மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்!

Follow Us