AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

என்னப்பா இது…. மீண்டும் சாப்பாட்டிற்காக போட்டியாளர்களிடம் சண்டையிடும் ஜேசன்…!

Jason And Shathiga Bigg Boss: தமிழில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 59வது நாளில் இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் சாப்பாட்டிற்காக மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. ஜேசன், அஸ்மிதா மற்றும் சாதிகாவிடம் வாக்குவாதம் செய்வதுபோல ப்ரோமோ வெளியாகியுள்ளது.

என்னப்பா இது…. மீண்டும் சாப்பாட்டிற்காக போட்டியாளர்களிடம் சண்டையிடும் ஜேசன்…!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 04 Nov 2026 16:25 PM IST

தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கிய நிலையில் சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிலையில், தற்போது மொத்தம் 14 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர். இந்த போட்டியில் வாரம் வாரம் புது புது டாஸ்க் கொடுக்கப்பட்டுவரும் நிலையில், இந்த வாரத்தில் பிபி திருந்துங்கடா அகாடமி (BB Thirundhungada Academy) என்ற டாஸ்க் ஒன்று நடந்துவருகிறது. இந்த டாஸ்கில் அஸ்மிதா மற்றும் ஜேசன் இருவருக்குமே சீக்ரட் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.

இது சுவாரஸ்யமாக நடந்துவந்த நிலையில், சாப்பாட்டின் அளவு மற்றும் அஸ்மிதா பேசியது தொடர்பாக ஜேசன் கோபத்தில் பேசுவதுபோல ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்கில் முதல் டார்கெட் யார் தெரியுமா? வைரலாகும் புரோமோ வீடியோ!

பிக் பாஸில் சாப்பாட்டிற்காக போட்டியாளர்களுடம் மோதும் ஜேசன்:

இந்த ப்ரோமோவில், அடாவடி அன்சர், அஸ்மிதாவிடம் வெள்ளரிக்காய் ஏன் தோலுடன் இருக்கிறது ? என நகைச்சுவையாக கேட்பதுபோல பேசியிருந்தார். அந்த வகையில், அவர் வாழைப்பழத்தை விட அதன் தோலில் சத்து அதிகம் என கூறியிருந்தார். உடனடியாக கோபப்பட்ட ஜேசன், வாழைப்பழத்தில் தோலை சாப்பிடுவதற்கு நாங்கள் என்ன குரங்கா? என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அஸ்மிதாவும் ஆமாம் என அதில் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பர்த்டே பாய் சாய் அபயங்கர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?

இந்த பிரச்சனை ஓரளவு முடிந்த நிலையில், சாப்பாட்டின் அளவு சரியாக இல்லை என சாதிகாவிடம் வேண்டுமென்றே பேசியிருந்தார். உடனே சாதிகா வேண்டுமென்றே பேசுவதுபோல செய்யாதீர்கள். என கூறியிருந்தார். உடனே ஜேசன் தனது உணவு தட்டில் இருந்த சாப்பாட்டை தூக்கி வீசியுள்ளார். மேலும் அவர் கோபத்துடன் அமைதியாக உட்காந்திருப்பதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 59வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த வாரத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிபி திருந்துங்கடா அகாடமி டாஸ்க் நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்த டாஸ்க்கிலும் பல பிரச்சனைகள் போட்டியாளர்கள் மத்தியில் இருந்துவருகிறது.இந்த டாஸ்க் இந்த கொண்டுபோகும் என எண்ணினால், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை மற்றும் போட்டியால் இந்த நிகழ்ச்சியை சீரியஸ் ஆக்கி வருகிறார்கள். மேலும் இந்த வராம தீபாவளி வாரம் என்ற நிலையில், எவிக்ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us