தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட மாஸ் அறிவிப்பு.. 5 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்!
Unreserved Special Trains Announcement : தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 5 முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அது தொடர்பான முழு விவரத்தை இந்தப் பதி வில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகள் வசதிக்காகவும் 5 முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில்,
தாம்பரம் டூ மானாமதுரை சிறப்பு ரயில்: தாம்பரம் டூ மானாமதுரை முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் ( வண்டி எண்: 06161) நவம்பர் 6- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) மாலை 5:30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 3:45 மணிக்கு மானாமதுரை சென்றடையும். இதே போல, மானாமதுரை- தாம்பரம் சிறப்பு ரயில் ( வண்டி எண்: 06162) நவம்பர் 7- ஆம் தேதி ( சனிக்கிழமை) காலை 6:30 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 3:45 மணிக்கு தாம்பரத்தை சென்றடைய உள்ளது.
மேலும் படிக்க: காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய் – காவலர்களிடம் கேள்வி




மானாமதுரை சிறப்பு ரயில்
தாம்பரம் டூ மானாமதுரை சிறப்பு ரயில்: தாம்பரம்- மானாமதுரை முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் ( வண்டி எண்: 06159) நவம்பர் 7- ஆம் தேதி ( சனிக்கிழமை) மாலை 4:35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1:45 மணிக்கு மானாமதுரையை சென்றடையும். இதே போல, மானாமதுரை- தாம்பரம் சிறப்பு ரயில் ( வண்டி எண்: 06160) நவம்பர் 9- ஆம் தேதி ( திங்கள்கிழமை) இரவு 10 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.
சென்னை எழும்பூர்- திருச்சி ஒரு வழி சிறப்பு ரயில்: சென்னை எழும்பூர்- திருச்சி முன்பதிவு இல்லா மெமு சிறப்பு ரயில் ( வண்டி எண்: 06191) நவம்பர் 6- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) மாலை 6:30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதி காலை 4:55 மணிக்கு திருச்சி சென்றடையும்.
திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில்
சென்னை எழும்பூர்- திருச்சி சிறப்பு ரயில்: சென்னை எழும்பூர்- திருச்சி முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் ( வண்டி எண்: 06193) நவம்பர் 7- ஆம் தேதி ( சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு திருச்சியை சென்றடையும். இதேபோல, திருச்சி- சென்னை முன்பதிவு விழா மெமு சிறப்பு ரயில் ( வண்டி எண்- 06194) நவம்பர் 9- ஆம் தேதி ( திங்கள் கிழமை) இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூரில் சென்றடையும்.
திருச்சி- தாம்பரம் ஒரு வழி சிறப்பு ரயில்: திருச்சி- தாம்பரம் முன்பதிவுல்லா மெமு சிறப்பு ரயில் ( வண்டி எண்: 06192) நவம்பர் 7- ஆம் தேதி ( சனிக்கிழமை) காலை 5:50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 11:30 மணிக்கு விளம்பரத்தையும் சென்றடையும்.
மேலும் படிக்க: முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு தீபாவளி இலவச வேட்டி, சேலை – ரேஷன் கடைகளில் நவ. 7 வரை விநியோகம்