க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே… 4 ஆண்டுகளைக் கடந்தது லவ் டுடே படம் – வீடியோ பதிவை வெளியிட்டது படக்குழு!
4 Years Of Love Today Movie | நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக அறிமுகம் ஆன படம் லவ் டுடே. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கோமாளி. நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடுத்த இந்தப் படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கிய படம் லவ் டுடே (Love Today). மேலும் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அவர் நாயகனாக அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் எப்படி மாபெரும் வெற்றியைப் பெற்றதோ அதே போல நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை இவானா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, அக்ஷயா உதயகுமார், பரத், ஆதித்யா கதிர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




4 ஆண்டுகளைக் கடந்தது லவ் டுடே படம் – வைரலாகும் வீடியோ பதிவு:
இந்த லவ் டுடே படம் வெளியான போது நிஜ வாழ்க்கையில் பல காதலர்கள் தங்களது காதலின் ஆழத்தையும் சிலருக்கு காதல் ப்ரேக் அப் ஆனதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தப் படம் பல மாற்றங்களை நிஜ வாழ்க்கை காதலர்களுக்கு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த லவ் டுடே படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக படக்குழு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
லவ் டுடே படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Four years ago, #LoveToday brought our everyday relationship stories to the big screen and we haven’t stopped relating since 🫶🏻
#4YearsOfLoveToday
#KalpathiSAghoram
#KalpathiSGanesh
#KalpathiSSuresh
@archanakalpathi @aishkalpathi https://t.co/PwU1PP7YDS— AGS Entertainment (@Ags_production) November 4, 2026