தீபாவளி டைம்.. ஒரு ரூபாய் அதிரசம் நினைவுகள் – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமந்தா பகிர்ந்த நெகிழ்ச்சியான தருணம்.
சோனி விழாவின் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியின் வரவிருக்கும் தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில், நடிகை சமந்தா தீபாவளி அதிரசம் குறித்தும், அது வாங்குவதற்காக காசு சேர்த்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக அப்படியான நினைவுகள் தற்போது கிடைப்பதில்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்
சில உணவுகளின் சுவை நம்மை மீண்டும் சிறுவயதிற்கே கொண்டு செல்லும்,நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்கு அப்படிப்பட்ட ஒரு உணவுதான் அதிரசம். சோனி விழாவின் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியின் வரவிருக்கும் தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில், சிறுவயதில் வீட்டுக்கு வெளியே விற்கப்படும் ₹1 அதிரசத்தை வாங்குவதற்காகக் காசு சேமித்த நினைவுகளைச் சமந்தா பகிர்ந்துகொள்கிறார். இன்றைக்கு அந்த அனுபவத்தை மீண்டும் பெற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். Endemol Shine India தயாரிக்கும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் பிரபலங்கள் பல்வேறு சமையல் சவால்களில் பங்கேற்று தங்களது சமையல் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வரவிருக்கும் எபிசோடில், தீபாவளிப் பலகாரங்களை மையமாகக் கொண்ட சிறப்புச் சவால்கள் நடைபெறுகின்றது. இதில் போட்டியாளர்கள் 90 நிமிடங்களுக்குள் நான்கு வகையான இனிப்பு மற்றும் கார உணவுகளைத் தயாரித்து, ஒரு பண்டிகை பரிசுப் பெட்டியை உருவாக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் ஒரு இனிப்பு, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட வேண்டும் என சவால்கள் உள்ளன. தீபாவளிப் பலகாரங்கள் குறித்த உரையாடலின்போது தனக்குப் பிடித்தமான உணவுகளில் அதிரசமும் ஒன்று என சமந்தா கூறுகிறார். சிறுவயதில் வீட்டுக்கு வெளியே விற்கப்படும் ₹1 அதிரசத்தை வாங்குவதற்காகக் காசு சேமித்து, அதை ரசித்து சாப்பிட்ட நினைவுகளையும் அவர் சொல்லியுள்ளார்.
வீடியோ
View this post on Instagram
இந்த உரையாடலில் கலந்துகொள்ளும் செஃப் வெங்கடேஷ் பட், தனது சிறுவயது தீபாவளி நினைவுகளையும் பகிர்ந்துகொள்கிறார். தீபாவளி என்றாலே பட்டாசுகளும் உணவுகளும்தான் தனது நினைவுக்கு வருவதாகக் கூறும் அவர், தங்கள் வீட்டில் தீபாவளிப் பலகாரங்கள் கார்த்திகை தீபம் வரை தொடர்ந்து தயாரிக்கப்படும் என்றும் நினைவுகூர்கிறார். அதிரசம் மற்றும் உலர் பழங்கள் கலந்த மிக்ஸர் ஆகியவை தனக்குப் பிடித்தமான பண்டிகை உணவுகள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் மைசூர் பாக், முறுக்கு, சோமாஸ், சீடை உள்ளிட்ட பலவகை பாரம்பரியப் பலகாரங்களையும் புதுமையான இனிப்பு வகைகளையும் தயாரிக்கின்றனர். இந்த எபிசோட், தீபாவளி உணவுகளின் சுவையை மட்டுமல்லாமல், அவற்றுடன் இணைந்திருக்கும் சிறுவயது நினைவுகளையும் உணர்வுகளையும் கொண்டாடும் வகையில் அமைகின்றது.
Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு Sony VIZHA-வில் காணலாம். Sony LIV-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம்