AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி.. முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு!

Tirupattur Job Fraud Scam: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 68 பேரிடம் ரூ.6.30 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீரின் முன்னாள் உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்..

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி.. முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு!
முன்னாள் அமைச்சரின் உதவியாளர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Nov 2026 14:09 PM IST

திருப்பத்தூர், நவ.03: தமிழகத்தில் அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி அப்பாவி பொதுமக்களிடமும் வேலை தேடும் இளைஞர்களிடமும் பணத்தைப் பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு விருப்பமான இடத்திற்குப் பணிமாறுதல் பெற்றுத் தருவதாகவும் கூறி சுமார் 68 பேரிடம் கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்பட்ட மிகப்பெரிய மோசடிச் சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்.. உரிய அனுமதியின்றி இயங்கிய 87 ரிசார்ட்டுகளை மூட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மோசடி:

கடந்த 2017 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் நிலோபர் கபில். இவரிடம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் அமைச்சரின் தனி உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அமைச்சரின் அதிகாரத்தையும் தனது செல்வாக்கையும் தவறாகப் பயன்படுத்திய பிரகாசம், அரசுத் துறைகளில் எளிதில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இளைஞர்களை நம்ப வைத்துள்ளார். இதனை முழுமையாக நம்பிய திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 68 பேர், பல தவணைகளாக மொத்தம் 6 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை அவரிடம் பணமாகக் கொடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் ஏமாற்றமும் புகாரும்:

பணம் கொடுத்து நீண்ட மாதங்கள் கடந்தும் கூறியபடி அரசு வேலையோ அல்லது உரிய பணிமாறுதலோ பெற்றுத் தரப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, பிரகாசம் முறையான பதிலளிக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்ததை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து லஞ்ச ஒழிப்புத்துறையில் முறையான புகார் அளித்தனர். இந்தப் புகாரின் மீது நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீரின் முன்னாள் உதவியாளரான பிரகாசம் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் தற்போது அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க: மதுரையில் ரவுடி ‘குட்டி சாக்கு’ சூர்யா கொடூரக் கொலை.. 12 மணி நேரத்தில் 5 பேரை தட்டி தூக்கிய போலீசார்!!

லஞ்ச ஒழிப்புத்துறையின் தீவிர விசாரணை:

இந்தப் பெருந்தொகை மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பெறப்பட்ட பணம் எந்தெந்த வழிகளில் பரிமாற்றம் செய்யப்பட்டது மற்றும் மோசடி செய்யப்பட்ட தொகை எங்கு பதுக்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு கோணங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது பதிவாகியுள்ள இந்த மாபெரும் ஊழல் வழக்கு திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us