AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரையில் ரவுடி ‘குட்டி சாக்கு’ சூர்யா கொடூரக் கொலை.. 12 மணி நேரத்தில் 5 பேரை தட்டி தூக்கிய போலீசார்!!

Madurai rowdy Kutti Saakku Surya murder: மதுரை சமயநல்லூர் அருகே பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரௌடி 'குட்டி சாக்கு' சூர்யா முகம் சிதைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், 12 மணி நேரத்திற்குள் 5 பேரைக் கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர்.

மதுரையில் ரவுடி ‘குட்டி சாக்கு’ சூர்யா கொடூரக் கொலை.. 12 மணி நேரத்தில் 5 பேரை தட்டி தூக்கிய போலீசார்!!
குட்டி சாக்கு சூர்யா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Nov 2026 12:26 PM IST

மதுரை, நவ.03: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் குலைக்கும் வகையிலான குற்றச் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், மதுரையில் ரௌடி ஒருவர் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தில் இந்தத் திடுக்கிடும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்லப்பட்டவர் மதுரை தாச்சியம்மன் நகரைச் சேர்ந்த ‘குட்டி சாக்கு’ எனப்படும் சூர்யா என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உட்பட பத்திற்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்.. சொத்து குவிப்பு வழக்கில் தீவிரமடையும் விசாரணை!

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை:

சம்பவத்தன்று மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்தப் பாழடைந்த பழைய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தில் சூர்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. அந்தச் சமயத்தில் அவருடன் மது அருந்திய அஸ்வின் என்பவருக்கும் சூர்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அஸ்வின் மற்றும் அவரது கூட்டாளிகள் சூர்யாவைச் சூழ்ந்துகொண்டு உருட்டுக் கட்டைகள் மற்றும் கம்பியால் தாறுமாறாக வெட்டிச் சிதைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் சூர்யாவின் முகம் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை அரங்கேற்றிய அந்த மர்மக் கும்பல் அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடியுள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துப்பு:

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் காவல் துறையினர், கொல்லப்பட்ட சூர்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், முன்விரோதம் காரணமாக இந்தப் பழிக்குப்பழி கொலை சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர். மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் பதிவான சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்த காவல்துறையினர், கொலையாளிகள் தப்பிச் செல்லும் வழிகளையும் அவர்களின் அடையாளங்களையும் துல்லியமாகக் கண்டறிந்தனர்.

இதையும் படிக்க: தீபாவளி சிறப்பு ரயில்.. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்.. பயணிகள் ஏமாற்றம்!!

கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் நீதிமன்றக் காவல்

சம்பவ இடத்திலுள்ள தடயங்களையும் சிசிடிவி காட்சிகளையும் அடிப்படையாக வைத்து தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதன் பலனாக, குற்றவாளிகள் தப்பியோடிய சில மணி நேரங்களிலேயே வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். இக்கொலைச் சம்பவத்தில் நேரடித் தொடர்பு உடைய அஜய், விஷ்ணு, செல்வக்குமார், அஸ்வின் மற்றும் சந்துரு (என்ற குட்டிமணி) உள்ளிட்ட ஐந்து பேரையும் காவல்துறையினர் வெறும் 12 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையோதியுள்ள கட்டிடத்தில் ரவுடி ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow Us