AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கண்களை மறைத்த சொத்து.. தாத்தா என்றும் பாராமல் வெட்டி வீசிய பேரன்… நாங்குநேரியில் கொடூர சம்பவம்!

Nanguneri Murder : திருநெல்வேலி மாவட்டத்தில் சொத்து தகராறில் தாத்தாவை அரிவாளால் வெட்டி கொலை செய் த பேரனை நாங்குநேரி போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கண்களை மறைத்த சொத்து.. தாத்தா என்றும் பாராமல் வெட்டி வீசிய பேரன்… நாங்குநேரியில் கொடூர சம்பவம்!
நாங்குநேரி கொலையில் கைதானவர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Nov 2026 18:47 PM IST

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் தளவாய் ( 75 வயது). இவரது மனைவி பெருமாள் தாய். தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளின் மகன் கிருஷ்ணராஜா ( 20 வயது). இவர், ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மறுகால்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ஆவார். இந்த நிலையில், தளவாய்க்கும், கிருஷ்ணராஜாவுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 1- ஆம் தேதி) தளவாய் நாங்குநேரி அண்ணா சாலையில் பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கிருஷ்ணராஜா, சொத்து தொடர்பாக பேசியதாக தெரிகிறது.

சொத்து தகராறில் தாத்தாவை அரிவாளால் வெட்டி பேரன்

இதில், தாத்தா தளவாய்க்கும், பேரன் கிருஷ்ணராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருவர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணராஜா தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் தாத்தா என்றும் பாராமல் தளவாயை சரமாரியாக வெட்டினார். இதில், பலத்த வெட்டு காயம் அடைந்த தளவாய் அங்கேயே மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்க வந்த நிலையில், கிருஷ்ணராஜா அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

மேலும் படிக்க: அரியலூர் அருகே மதுபோதையில் ஊர்க்காவல்படை வீரர் அடித்துக் கொலை.. ரோந்துப் பணியின் போது அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

அரிவாள் வெட்டில் உயிரிழந்த முதியவர்

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில், நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் கண்ணா மற்றும் காவல் ஆய்வாளர் ராஜாராம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த தளவாயை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே முதியவர் தளவாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தலைமறைவான பேரனை கைது செய்த போலீஸ்

இந்த சம்பவம் குறித்து, தளவாய் குடும்பத்தினர் நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், பொது இடத்தில் தாத்தா என்றும் பாராமல் அவரை வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த பேரன் கிருஷ்ணராஜை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாங்குநேரி கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: தோல்வியிலும் வெற்றி கண்டது திமுக.. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தவெக.. சேகர் பாபு கடும் தாக்கு!

Follow Us