Tamil Nadu Weather Alert: உருவானது முரசு புயல்… நாளை இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : அர்னாப் புயல் முடிவடைந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில், வங்கக்கடலில் முரசு புயல் (Cylone Murasu) நவம்பர் 1, 2026 இன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில் நவம்பர் 2, 2026 நாளை 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 1: அர்னாப் புயல் முடிவடைந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில், வங்கக்கடலில் முரசு புயல் (Cylone Murasu) நவம்பர் 1, 2026 இன்று உருவாகியுள்ளது. இது 2026 நவம்பர் 3 காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் – நர்சாபூர் இடையே பலத்த காற்றுடன் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
உருவான முரசு புயல்
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய நிகோபார் தீவுகள் பகுதியில், அக்டோபர் 30, 2026 நேற்று முன்தினம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அது படிப்படியாக வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நவம்பர் 2, 2026 நாளை தீவிரப் புயலாக மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிக்க : அரியலூர் அருகே மதுபோதையில் ஊர்க்காவல்படை வீரர் அடித்துக் கொலை.. ரோந்துப் பணியின் போது அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!




இந்தப் புயலுக்கு ‘முரசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளது. ‘முரசு’ என்பது தமிழில் பறை’ அல்லது ‘மேளம்’ எனப் பொருள்படும் ஒரு இசைக்கருவியைக் குறிக்கும் சொல் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ‘அர்னாப்’, கடந்த வாரம் வங்கக்கடலில் உருவாகி, 2026 அக்டோபர் 28 அன்று ஆந்திராவின் ஏனாம் அருகே மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. அந்தப் புயல் கரையைக் கடந்து ஒரு வாரம் ஆவதற்குள், இரண்டாவது புயலும் உருவாகியுள்ளது.
நாளை 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
முரசு புயலின் தாக்கத்தால், திருவள்ளூர் மாவட்டத்துக்கு நவம்பர் 1, 2026 இன்று மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 1, 2026 இன்று கனமழை பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 2, 2026 நாளை சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் நவம்பர் 2, 2026 நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : மலைப்பாதையில் கோர விபத்து.. 100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
இதற்கிடையில் முரசு புயல் அடுத்த 30 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரம் – வடதமிழகக் கடற்கரைப் பகுதியை வந்தடையும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். புயலின் தாக்கத்தால், சென்னையில் இன்றிரவே மழை தொடங்கும் என்றும், 2026 நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் கணித்துள்ளார்.