AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் அதிகாலையில் கோர விபத்து.. வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தூங்கிக்கொண்டிருந்த பெண் உடல் கருகிப் பலி!

Refrigerator Explosion in Chennai Korattur: சென்னை கொரட்டூரில் அதிகாலையில் குளிர்சாதனப் பெட்டி (Refrigerator) வெடித்துச் சிதறிய விபத்தில் மாற்றுத்திறனாளிப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கணவர் மற்றும் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் அதிகாலையில் கோர விபத்து.. வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தூங்கிக்கொண்டிருந்த பெண் உடல் கருகிப் பலி!
பிரிட்ஜ் வெடித்து விபத்து
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Nov 2026 08:16 AM IST

சென்னை, நவ.01: சென்னை கொரட்டூர் விவேகானந்தா பள்ளி அருகில் உள்ள ‘கணேஷ் பிருந்தாவனம்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் வசித்து வந்தவர் ரமணி. இவருடைய மனைவி அகிலா மற்றும் மகன் கார்த்திக் ஆகிய மூவரும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் அனைவரும் இரவு தூங்கச் சென்ற நிலையில், நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணி அளவில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு பயங்கரச் சத்தம் கேட்டுள்ளது. வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, வீடு முழுவதும் தீ மளமளவெனப் பரவத் தொடங்கியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குடும்பத்தினருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவிற்குப் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

இதையும் படிக்க : தாக்கியதில் உயிரிழந்த மனைவி.. எரித்து சாம்பலாக்கிய கணவன்.. தோண்டி துலாவி கைது செய்த கடலூர் போலீஸ்!

மாற்றுத்திறனாளிப் பெண் அகிலா பலி:

வீட்டில் திடீரென ஏற்பட்ட இந்தத் தீ விபத்தின் போது, ரமணியின் மனைவியான அகிலா உடல்நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் உடனடியாக படுக்கையை விட்டு எழுந்து வெளியேற முடியவில்லை. தீ மளமளவெனப் பரவியதால் நரக வேதனைக்குள்ளான அவர், தப்பிக்க வழி தெரியாமல் வீட்டிற்குள்ளேயே சிக்கிக் கொண்டு பரிதாபமாகத் தீயில் கருகி உயிரிழந்தார். அகிலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் நிலைமை முற்றிலுமாகக் கைமீறிப் போய்விட்டது. அதிகாலையில் கண் விழித்துப் பார்க்கும் நேரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம், அந்தக் குடியிருப்புப் பகுதி மக்களையும் உறவினர்களையும் மீளாத் துயரத்திலும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

படுகாயமடைந்த கணவர் மற்றும் மகன்:

பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அகிலா உயிரிழந்தது மட்டுமின்றி, அவருடன் இருந்த கணவர் ரமணி மற்றும் மகன் கார்த்திக் ஆகிய இருவருக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீயை அணைக்க முயன்றபோது புகையின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் அவர்கள் இருவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தந்தை ரமணி மற்றும் மகன் கார்த்திக் ஆகிய இருவரையும் மீட்டு உடனடியாகச் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: அடுத்தடுத்து கைதிகள் தப்பிப்பு.. இதை முதல்ல செய்யுங்க.. சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் கறார் உத்தரவு!

கொரட்டூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சி:

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கொரட்டூர் காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், வீட்டில் பயன்படுத்தப்பட்ட குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு அல்லது பழுது காரணமாகவே இந்த வெடி விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. மின் சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளதுடன், சென்னையில் அதிகாலையில் நிகழ்ந்த இந்தத் தீ விபத்து அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us