AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தாக்கியதில் உயிரிழந்த மனைவி.. எரித்து சாம்பலாக்கிய கணவன்.. தோண்டி துலாவி கைது செய்த கடலூர் போலீஸ்!

Cuddalore Crime : கடலூர் மாவட்டத்தில் குடும்ப தகராறில் தாக்கியதில் உயிரிழந்த மனைவியை சுடுகாட்டில் எரியூட்டிய கணவர் மற்றும் அதற்கு உதவிய அவரது தந்தை ஆகிய இருவரை அண்ணாமலை நகர் போலீசர் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

தாக்கியதில் உயிரிழந்த மனைவி.. எரித்து சாம்பலாக்கிய கணவன்.. தோண்டி துலாவி கைது செய்த கடலூர் போலீஸ்!
கொலை செய்யப்பட்ட சிவகாமி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 31 Oct 2026 18:33 PM IST

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( 34 வயது). இவரது மனைவி சிவகாமி ( 30 வயது). ரவிச்சந்திரன் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு ஒரு மகன் இருந்து வருகிறார். அவர் தற்போது அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், தம்பதி இடையே நடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் சமாதானம் ஆகி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை திடீரென இருவரிடையே தகராறு ஏற்பட்டது.

கணவன் தாக்கியதில் உயிரிழந்த மனைவி

அப்போது, ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன், சிவகாமியை கடுமையாக கடுமையாக தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்து கோ அல்லது கிராம மக்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வாகனம் ஒன்றை வரவழைத்து சிவகாமியின் உடலை ஏற்றி சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்ததாக தெரிகிறது. இதனிடையே, கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் சுடுகாட்டில் பெண்ணின் உடல் எரிக்கப்படுவது கிராம உதவியாளருக்கு தெரியவந்தது. அவர், இது தொடர்பாக வட்டாட்சியரிடம் புகார் அளித்தார். அவர் அந்த பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை அள்ளிக் கொடுத்த CM விஜய்.. எவ்வளவு தெரியுமா?

சுடுகாட்டில் எரியூட்டப்பட்ட பெண்ணின் உடல்

அந்த தகவலின் பேரில், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் டி.ஜெ. சத்திரிய கவின், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் கவிதா உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பெண்ணின் உடல் எரிக்கப்பட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக தீயை அணைத்த போலீசார் பாதி எரிந்தும், எரியாமலும் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் கணவர்- மாமனார் அதிரடி கைது

தொடர்ந்து, அந்த பெண்ணின் கணவர் ரவிச்சந்திரன் மற்றும் சிவகாமியின் சடலத்தை எரிக்க உதவியதாக ரவிச்சந்திரனின் தந்தை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மனைவி உயிரிழந்ததை யாருக்கும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக சுடுகாட்டில் ஏறியூட்டியது ஏன் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: “எனக்கு ஒரு முத்தம் தாயேன்” திருப்பூரில் ரவுடி மனைவியிடம் அடம்பிடித்த போலீஸ்.. Missing புகாரால் வெளிவந்த ஏட்டுவின் சேட்டை!

Follow Us