AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“எனக்கு ஒரு முத்தம் தாயேன்” திருப்பூரில் ரவுடி மனைவியிடம் அடம்பிடித்த போலீஸ்.. Missing புகாரால் வெளிவந்த ஏட்டுவின் சேட்டை!

Tiruppur Constable Transfer Armed Reserve : திருப்பூர் மாவட்டத்தில் பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக பாலியல் தொந்தரவு அளித்த போலீஸ் ஏட்டுவை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும், காணாமல் போன அந்த பெண்ணை தீவிரமாக தேடிவருகின்றனர்.

“எனக்கு ஒரு முத்தம் தாயேன்” திருப்பூரில் ரவுடி மனைவியிடம் அடம்பிடித்த போலீஸ்.. Missing புகாரால் வெளிவந்த ஏட்டுவின் சேட்டை!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 31 Oct 2026 17:18 PM IST

திருப்பூர் மாவட்டம், மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரது உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அந்த பெண்ணின் கணவர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், அந்த பெண்ணின் செல்போன் எண் மூலமாக டவர் லொகேஷன் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. இதில், மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு ஒருவர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு பலமுறை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.

ரவுடியின் மனைவியிடம் முத்தம் கேட்ட போலீஸ் ஏட்டு

அதாவது அந்த பெண்ணின் கணவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அவரை வரலாற்று பதிவேடு குற்றவாளி பட்டியலில் வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதை சாக்காக வைத்து அந்த நபரின் மனைவி செல்போன் என்னைப் பெற்ற அந்த ஏட்டு அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக ஒவ்வொரு நாளும் அந்த பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக வீடியோ கால் செய்து எனக்கு ஒரு “முத்தம் தாயேன்” என்று கேட்டு பிடிவாதம் பிடித்துள்ளாராம்.

மேலும் படிக்க: செஞ்சியில் கோரம்.. 6 வயது சிறுவன் கிணற்றில் வீசி கொலை.. குடும்ப தகராறில் வெறி பிடித்த தந்தை கைது!

ஒரு நாளைக்கு 30 முறை வீடியோ கால் செய்து தொந்தரவு

மேலும், அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிக்கு எனது இச்சைக்கு இணங்குமாறு மனரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். அதன்படி, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 முறைக்கு மேலாக அந்த ஏட்டு வாட்ஸ் அப்பில் வீடியோ கால் செய்து அந்த பெண்ணை திக்கு முக்காட வைத்துள்ளார் என்ற சம்பவம் விசாரணையில் தெரியவந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறினாரா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட போலீஸ் ஏட்டு

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேஸ்வரி கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், குற்றசாட்டுக்கு உள்ளான போலீஸ் ஏட்டுவை பணியில் இருந்து விடுவித்து ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், அவர் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: காரில் லிப்ட் கொடுத்து பாலியல் தொல்லை.. கல்லூரி மாணவி அளித்த புகார்.. கன்னியாகுமரி தவெக நிர்வாகி அதிரடி கைது!

Follow Us