30,000 பேருக்கு ஆடு வழங்க நிதி ஒதுக்கீடு – வெற்றி ஆடு வளர்ப்பு திட்டத்துக்கு ஒப்புதல்
Vetri Magalir Scheme : ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் என 30,000 பேருக்கு, 100 சதவிகிதம் மானியத்தில் தலா 5 ஆடுகள் வழங்கும் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்துக்கு ரூ.109.75 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 31 : ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்தோருக்கு 100 சதவிகிதம் மானியத்தில் வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் (Vetri Magalir Scheme )திட்டத்துக்கு ரூ. 109 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 30,000 பேர் பயனடைார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊரகப் பகுதிகளில் வசிக்கும் தகுதியுள்ள 10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
30,000 பேருக்கு ஆடு வழங்க நிதி ஒதுக்கீடு
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் என 30,000 பேருக்கு, 100 சதவிகிதம் மானியத்தில் தலா 5 ஆடுகள் வழங்கும் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்துக்கு ரூ.109.75 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க : நெருங்கி வரும் தீபாவளி.. சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை எப்போது தொடங்கும்? வெளியான அறிவிப்பு!




கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேளாண் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகக் கால்நடைப் பராமரிப்புத் துறை விளங்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு, 2026 – 27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் இந்தத் திட்டத்தை அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், தற்போது நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு யார் பயனடைவார்கள்?
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய 30,000 பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும், முழுமையாக அரசு மானியத்தில், 5 வெள்ளாடுகள் அல்லது 5 செம்மறி ஆடுகள் வழங்கப்படும். பயனாளிகள் இதற்காக எந்தத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. ஒதுக்கப்பட்ட நிதியின்படி, ஒரு பயனாளிக்குச் சராசரியாக சுமார் ரூ.36,600 செலவிடப்படுகிறது.
நலிவடைந்த பிரிவினருக்குக் கால்நடைதள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் சூழல் உருவாகி, பொருளாதார நிலை மேம்படும் என்றும் ஆடுகள் விரைவாகப் பெருகக்கூடியவை என்பதால், காலப்போக்கில் இது பயனாளிகளுக்கு பெரும் சொத்தாக மாறும். இதன் மூலம், கிராமப்புறப் பொருளாதாரமும் வலுப்பெறும் என அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : டிக்கெட் கட்டணம் ரூ.250, கிரிக்கெட்டுக்கு அனுமதி… முதல்வர் விஜய்யிடம் திரையரங்க உரிமையாளர்கள் வைத்த 9 கோரிக்கைகள்
அண்மையில், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 10,000 பெண்களுக்கு விலையில்லாக் கறவை மாடுகள் வழங்குவதற்காக ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் தகுதியுள்ள 10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்குவதற்காக, நடப்பு நிதியாண்டில் ரூ.57 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.