AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கக்கடலில் உருவாகும் புயல்.. நவம்பர் 2 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Tamil Nadu Rains: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

வங்கக்கடலில் உருவாகும் புயல்.. நவம்பர் 2 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 31 Oct 2026 13:57 PM IST

அக்டோபர் 31, 2026: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் நவம்பர் 2-ம் தேதி மாலை ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகே நகரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்டோபர் 31) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக்கடல் முதல் தெற்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள் வரை வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

மேலும் படிக்க: “இனி அப்படி நடந்தால் சும்மா விட மாட்டேன்”.. சிறை கைதிகள் தப்பிய விவகாரத்தில் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் எந்தெந்த நாட்களில் மழை இருக்கும்?

அக்டோபர் 31-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

நவம்பர் 1-ம் தேதி வடகடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 2-ம் தேதி நீலகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 3-ம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 4-ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், நவம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வறண்ட வானிலையே நிலவும்:

அக்டோபர் 31-ம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும், நவம்பர் 1-ம் தேதி 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும். நவம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகாலை நிலவிய பனிமூட்டம்! திருச்சியில் 800 மீட்டராகக் குறைந்த பார்வைத்திறன் – வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

Follow Us