AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கைது செய்த கையோடு தப்பியோடிய கைதி.. சம்பவ இடத்தில் என்ன நடந்தது? கோவை போலீசாரின் அதிரடி விளக்கம்!

Coimbatore Prisoner Escape Police Cclarification : கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறையில் அடைக்க அழைத்து சென்ற கைதி தப்பி சென்றது தொடர்பாக மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

கைது செய்த கையோடு தப்பியோடிய கைதி.. சம்பவ இடத்தில் என்ன நடந்தது? கோவை போலீசாரின் அதிரடி விளக்கம்!
கோவையில் தப்பியோடிய கைதி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 31 Oct 2026 14:41 PM IST

கோவையில் கைது செய்யப்பட்ட நபர் சிறை சாலையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்ற போது, அவர் திடீரென சிறை சாலை வளாகத்தில் இருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம், தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கைதி தப்பி சென்றது தொடர்பாக கோவை மாவட்ட காவல்துறை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது: நேற்று வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 30- ஆம் தேதி) இரவு சுமார் 11 மணி அளவில் ராகவன் என்ற குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கோயம்புத்தூர் விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அவர், இன்று சனிக்கிழமை ( அக்டோபர் 31- ஆம் தேதி) அதிகாலை சுமார் 12:40 மணி அளவில் அவரை அழைத்து சென்ற போலீசாரை தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

டிரோன்- வாகன சோதனை மூலம் தேடுதல் வேட்டை

இதை அறிந்த கோவை மாநகர காவல் துறை மற்றும் பிற பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அத்துடன் காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி சென்ற கைதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. மேலும், டிரோன் கேமராக்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆகியவை மூலமும், தீவிர வாகன சோதனைகள் மூலமும் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: கோவையில் கைதி தப்பியோடிய விவகாரம்.. அதிரடியாக 4 காவலர்கள் சஸ்பெண்ட்.. தீவிர விசாரணையில் தனிப்படை!!

4 காவலர்கள் பணியிடை நீக்கம்

தப்பி ஓடிய கைதியை விரைவில் கைது செய்வதற்கு ஏதுவாக சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து நண்பர்களும் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளியை பாதுகாப்பாக அழைத்து செல்லும் பணியின் போது, ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக பொறுப்பான 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புழல் மத்திய சிறையில் இருந்து 4 கைதிகளும், தேனி மாவட்ட கிளை சிறையில் இருந்து 17 கைதிகளும் அடுத்தடுத்து கைதிகள் தப்பி சென்றனர்.

தமிழகத்தில் அடுத்தடுத்து கைதிகள் தப்பிய சம்பவம்

இந்த சம்பவம் சிறைத்துறை, காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தீவிர தேர்தல் வேட்டைக்கு பிறகு தப்பி சென்ற அனைத்து கைதிகளும் பிடிக்கப்பட்டு வெவ்வேறு மாவட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இதில், தேனி சிறையில் 9 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் சிறைத்துறை டிஜிபி-யும் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: புழலில் போக்சோ வழக்கில் கைதான நபர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட்டம்.. காவல் துறையின் அலட்சியத்தால் பரபரப்பு!!

Follow Us