AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இடைத்தேர்தல் தொகுதியில் ஷோ காட்டும் முதல்வர்.. தவெக அரசுக்கு எச்சரிக்கை மணி அடிச்சாச்சு.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

M.K. Stalin Criticism TVK Government : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் ஷோ காட்டுவதாகவும், தவெக அரசுக்கு பெண்கள் எச்சரிக்கை மணி அடித்துவிட்டதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார் .

இடைத்தேர்தல் தொகுதியில் ஷோ காட்டும் முதல்வர்.. தவெக அரசுக்கு எச்சரிக்கை மணி அடிச்சாச்சு.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
முதல்வர் விஜய் - மு.க.ஸ்டாலின்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 31 Oct 2026 15:15 PM IST

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருவது, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், தமிழக வெற்றிக் கழக அரசை கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, இன்று சனிக்கிழமை ( அக்டோபர் 31- ஆம் தேதி) தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான மு. க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தவெக அரசு மீது பெரும் கோபத்தில் பெண்கள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் கட்சி சார்பு இன்றி பல்வேறு மகளிர்கள் பெருந்திரளாக பங்கேற்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தங்கள் வீடுகளில் மின்சார கட்டண பில்லையும், மளிகை கடை பில்லையும் பார்த்து தமிழக வெற்றிக் கழக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருந்து வருகின்றனர். விலைவாசி ஏற்றம் காரணமாக ஏழை மக்கள் விக்கித்து நிற்கின்றனர்.

மேலும் படிக்க: தவெக ஆட்சியில் போதையில் புதையும் தமிழகம்.. எந்த மூலையில் உள்ளது சிங்கப்பெண் படை.. டிடிவி தினகரன் காட்டம்!

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் சீர் குலைவு

இது மட்டும் இன்றி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தங்கள் வீட்டு பெண் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பவே தாய்மார்கள் அச்சப்படும் அளவுக்கு சட்டம்- ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு போய் உள்ளது. இந்த லட்சணத்தை தினந்தோறும் செய்திகளிலும், செய்தித்தாள்களிலும் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விமர்சனங்கள் செய்வோரை வேட்டை ஆடுவதிலும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் ஷோ காட்டுவதிலும் முதல்- அமைச்சர் ஜோசப் விஜய்க்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும்.

தவெக அரசுக்கான எச்சரிக்கை மணி அடிப்பு

இதற்கான எச்சரிக்கை மணியை தமிழக பெண்கள் அடித்து விட்டனர். அவர்களின் வேக் அப் காலுக்கு செவி சாய்ப்பது தமிழக வெற்றிக் கழக அரசின் கடமை ஆகும் என்று அந்த கண்டன அறிக்கையில் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தவெக அரசையும், முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலினையும் விமர்சித்து ஏற்கெனவே மு. க. ஸ்டாலின் தனி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எத்தனை காலத்துக்குதான் பொய் வழக்குகளை எதிர்கொள்ளவது.. எதிர் வழக்குகளை தாக்கல் செய்ய முடிவு.. முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்!

Follow Us