பாவம் பார்த்த தாய்.. இரும்பு ராடால் பதம் பார்த்த மகன்.. ஜாமீனில் எடுத்த தாய்க்கு நேர்ந்த கதி.. தஞ்சாவூரில் பெரும் சோகம்!
Thanjavur Women Murdered : தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறையில் இருந்த மகனை ஜாமீனில் எடுத்து புத்திமதி கூறிய தாயை கஞ்சா போதையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த பாசக்கார மகனை போலீசார் அதிரடியாக கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பழைய இண்டூர் பகுதியில் வசித்து வந்தவர் சின்ன பாப்பா (42 வயது). கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மகன் தேவராஜ் ( 19 வயது). இவர், படிக்காத நிலையில் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவராஜ் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடும் ரகளை செய்தார். இதன் காரணமாக, சிறுவன் தேவராஜை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பாவம் கருதி சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்த தாய்
தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வந்த தேவராஜை பாவமாக கருதிய அவரது தாய் சின்ன பாப்பா வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில், தேவராஜுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, சிறுவன் தேவராஜு ஜாமினில் வெளிவந்தார். இந்த நிலையில், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான சிறுவன் தேவராஜ் அடிக்கடி கஞ்சா புகைத்து வந்துள்ளார்.
மேலும் படிக்க: கொலை செய்யனுமா? Call Me.. அரசு பேருந்தில் பயணிகளை அலறவிட்ட வாசகம்!




புத்திமதி கூறிய தாய்யை கொடூரமாக கொலை செய்த மகன்
இதனை, அவரது தாய் சின்ன பாப்பா கண்டித்துடன் புத்திமதி கூறி வந்தார். அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல சிறுவன் கஞ்சா புகைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இதை பார்த்த, அவரது தாய் கண்டித்துடன் புத்திமதி கூறினார். தாயின் அறிவுரையும், அக்கறையும் புத்திக்கு ஏறாத சிறுவன் தேவராஜ் கஞ்சா போதையில் ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாய் என்றும் பாராமல் சின்ன பாப்பாவை தலையில் பலமாக அடித்தே கொலை செய்தார்.
நாக்கை துறுத்தியவாறு ரத்தம் சொட்டிய இரும்பு கம்பியுடன் மகன்
இதில், வலி தாங்க முடியாமல் கத்திய சின்ன பாப்பாவின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே, அந்த சிறுவன் கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு தாயை மாறி மாறி இரும்பு கம்பியால் அடித்து கொன்றார். அத்துடன் ஆத்திரம் தீராத தேவராஜ் நாக்கை துருத்தியவாறு இரத்தம் சொட்டிய இரும்பு கம்பியால் தாயின் சடலத்தின் அருகே ஆக்ரோசத்துடன் நின்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுவன் தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: காரில் லிப்ட் கொடுத்து பாலியல் தொல்லை.. கல்லூரி மாணவி அளித்த புகார்.. கன்னியாகுமரி தவெக நிர்வாகி அதிரடி கைது!