IND vs NZ: ஒரு ஆண்டில் அதிகமுறை 200+ ரன்கள் விட்டுக்கொடுத்த சோகம்.. இந்திய அணி மோசமான சாதனை!
Team India Unwanted T20 Record: 2026ல் இந்திய டி20 அணி பந்துவீச்சில் மோசமான சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 259 ரன்கள் விட்டுக்கொடுத்ததுடன், இந்த ஆண்டில் 11வது முறையாக 200+ ரன்கள் விட்ட இந்திய அணி, சர்வதேச டி20 வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிகமுறை 200+ ரன்களை விட்டுக்கொடுத்த அவமானகரமான சாதனையைப் பதிவு செய்தது.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் இன்று அதாவது 2026 அக்டோபர் 30ம் தேதி இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி (IND vs NZ) 250 ரன்களுக்கு மேல் எடுத்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. 2026-ஆம் ஆண்டில் இந்திய அணி (Indian Cricket Team) ஒரு டி20 போட்டியில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுப்பது இது 11-வது முறையாகும். இதன் மூலம், ஒரே ஆண்டில் அதிக முறை 200-க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்த அவமானகரமான சாதனையை இந்திய டி20 அணி படைத்தது.
ALSO READ: இந்தியாவை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
புள்ளிவிவரங்களின்படி, இந்தச் சாதனையை இதற்கு முன்பு ஐபிஎல் அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கூட்டாக வைத்திருந்தன. 2026 ஐபிஎல் சீசனில் இவ்விரு அணிகளும் தலா 9 முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தன. இந்தச் சாதனை, குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில், உண்மையிலேயே வியக்கத்தக்கதாகும். ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் 200-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் சாதாரணமாக இருந்தாலும், டி20 சர்வதேசப் போட்டிகளில் இது வழக்கமானதல்ல.




இந்திய பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்திறன்:
இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த பிறகும் பலமுறை வெற்றி பெற்றிருந்தாலும், இது பந்துவீச்சாளர்களுக்குக் கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது. சமீபத்திய போட்டிகளில், இந்திய அணி பெரும்பாலான போட்டிகளில் 200க்கு மேற்பட்ட ரன்களை வாரி வழங்கியுள்ளது. எனவே, பயிற்சியாளர், கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் இந்தப் புள்ளிவிவரத்தை தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
முதல் டி20 போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த இந்திய அணி:
நியூசிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 22ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. இருப்பினும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில், இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களை 200 ரன்களை எட்டவிடாமல் தடுத்தனர்.
ALSO READ: ஒரே ஓவரில் ஓடோடிய ரன்கள்.. மோசமான சாதனையை பந்துவீசி பிடித்த நிதிஷ்குமார் ரெட்டி!
தோல்வியை சந்தித்த இந்திய அணி
260 ரன்களைத் துரத்திய இந்திய அணி, நான்காவது டி20 போட்டியில் படுதோல்வி அடைந்தது. 260 ரன்களைத் துரத்திய இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து, 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. திலக் வர்மா 35 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உட்பட 35 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை அடித்தார். இந்த இன்னிங்ஸில் நியூசிலாந்து அணிக்காக ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.