AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ind vs NZ : இந்தியாவை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

New Zealand vs India 4th T20I: இந்தியா - நியூசிலாந்து இடையிலான 4வது டி20 போட்டியில் 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

Ind vs NZ : இந்தியாவை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
4th T20 Nz Win
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 30 Oct 2026 17:43 PM IST

இந்தியா – நியூசிலாந்து இடையிலான (IND vs NZ) 4வது டி20 போட்டியில் 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தின் வெற்றிக்குக் காரணமானவர் கிளென் பிலிப்ஸ், அவர் 49 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். மைக்கேல் பிரேஸ்வெல்லும் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்துப் பங்களித்தார். இந்த 2 பேட்ஸ்மேன்களும் இணைந்து 40 பந்துகளில் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணியின் பந்துவீச்சை சிதைத்தனர். ஜேக்கப் டஃபி 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாகச் செயல்பட்டார்.

சொதப்பிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள்:

இந்தியாவின் அதிரடி பேட்டிங் வரிசை முற்றிலும் சொதப்பினர். முதல் பந்தே பவுண்டரி அடித்து தொடங்கிய சஞ்சு சாம்சன் அடுத்த பந்தே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து உள்ளே வந்த இஷான் கிஷன் தனது கணக்கை தொடங்காமலே டக் அவுட்டாகி வெளியேறினார். அபிஷேக் ஷர்மாவும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் சிறிது நேரம் தாக்குப்பிடிக்க முயன்றனர். ஆனால் பவர்பிளே முடிவதற்குள் இருவரும் ஆட்டமிழந்தனர். மேத்யூ ஃபிஷர், அபிஷேக் ஷர்மாவை 27 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். மேலும் கேப்டன் ஐயர் 11 பந்துகளில் 22 ரன்களுக்கு ஆடம் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மிடில் ஓவர்களில், அக்சர் படேல் 7 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி வேகமாக பேட் செய்ய முயன்று, 21 ரன்களில் சான்ட்னரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். நமன் தீரும் வேகமாக பேட் செய்து, 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக்கப் டஃபியிடம் ஆட்டமிழந்தார். இறுதியில், துணை கேப்டன் திலக் வர்மா 35 ரன்கள் எடுத்து சில முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

ALSO READ: ஒரே ஓவரில் ஓடோடிய ரன்கள்.. மோசமான சாதனையை பந்துவீசி பிடித்த நிதிஷ்குமார் ரெட்டி!

அதிக ரன்களை விட்டுகொடுத்த இந்திய பவுலர்கள்:

நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக 20 ஓவர்களில் 259 ரன்கள் எடுத்தது. எந்தவொரு அணியாலும் இந்திய அணிக்கு எதிராக இத்தனை ரன்களை குவித்தது கிடையாது. கிளென் பிலிப்ஸின் அதிரடியான சதத்தின் பலத்தில் நியூசிலாந்து இந்த ஸ்கோரை எட்டியது. பிலிப்ஸ் 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளின் உதவியுடன் 107 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து மைக்கேல் பிரேஸ்வெல் வெறும் 25 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளின் உதவியுடன் 65 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சாளர்களில், அக்சர் படேல் 3 ஓவர்களில் 43 ரன்களையும், நிதிஷ் குமார் ரெட்டி 4 ஓவர்களில் 54 ரன்களையும், பிரின்ஸ் யாதவ் 49 ரன்களையும், மயங்க் யாதவ் 48 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். அர்ஷ்தீப் சிங் மட்டுமே 4 ஓவர்களில் 38 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

Follow Us