IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20.. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு!
IND vs NZ 4th T20: இந்தியா - நியூசிலாந்து இடையிலான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான (IND vs NZ) 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி (Indian Cricket Team) தங்களது ஆடும் லெவனில் இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தது. வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக இஷான் கிஷன் மீண்டும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம்பிடித்தார். மறுபுறம், அனுபவமிக்க பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டார். அதேநேரத்த்தில், நியூசிலாந்து அணியும் தங்களது ஆடும் லெவனில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்தது.
புவனேஷ்வர் குமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பினார். அவர் முதல் மூன்று போட்டிகளிலேயே அதிக ரன்களை வாரி வழங்கினார். அணிக்குத் திரும்பியதிலிருந்து, புவனேஷ்வர் 3 போட்டிகளில் 139 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அவருக்குப் பதிலாக மயங்க் யாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.




ALSO READ: குணமடைந்த இஷான்! வெளியேறும் சூர்யவன்ஷி..? இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றமா?
காயம் காரணமாக இஷான் கிஷன் 2வது மற்றும் 3வது டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இதற்கு முந்தைய இரண்டு போட்டிகளிலும் அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி ஆடும் லெவனில் இடம்பெற்றார். நான்காவது டி20 போட்டியில் இஷான் கிஷன் மீண்டும் அணிக்குத் திரும்பியதால், வைபவ் சூர்யவன்ஷி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக, வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யவன்ஷி 19 பந்துகளில் அதிரடியாக விளையாடி 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளின் பிளேயிங் அணி விவரம்:
#TeamIndia opt to bowl first at Eden Park.
Ishan Kishan and Mayank Yadav back in the XI.
Updates ▶️ https://t.co/fx264c9iLe
#NZvIND https://t.co/9PxADM0gvq
— BCCI (@BCCI) October 30, 2026
இந்திய அணி:
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ்
ALSO READ: ஆக்லாந்து ஈடன் பார்க் பிட்ச் ரிப்போர்ட்.. இந்திய அணிக்கு கொண்டாட்டமா?
நியூசிலாந்து அணி:
ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(கேப்டன்), நாதன் ஸ்மித், ஆடம் மில்னே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர்