AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: ஹர்திக்கை பரிமாற்றம் செய்ய திட்டமிடும் மும்பை..? அஸ்வின் வெளியிட்ட தகவல்!

Hardik Pandya IPL Transfer: முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் கூற்றுப்படி, ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகும் வாய்ப்புள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய ஐந்து அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

IPL 2027: ஹர்திக்கை பரிமாற்றம் செய்ய திட்டமிடும் மும்பை..? அஸ்வின் வெளியிட்ட தகவல்!
ஹர்திக் பாண்ட்யாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Oct 2026 21:01 PM IST

ஐபிஎல் 2027 சீசனுக்கு (IPL 2027) முன்னதாக மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் அந்த அணியில் இடம்பெறாமல் போகலாம், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பாண்டியாவை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஹர்திக் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் திரும்பத் திட்டமிடுவதாக வதந்திகள் பரவின, ஆனால் கேப்டன் பொறுப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ALSO READ: மும்பை அணியே முக்கியம்.. SA20-லிருந்து விலக முடிவெடுத்த பொல்லார்ட்..!

எந்த அணிக்கு செல்வார் ஹர்திக் பாண்ட்யா..?

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தனது பயணத்தைத் தொடர்வாரா அல்லது புதிய அணியின் ஜெர்சியில் களமிறங்குவாரா? அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக இந்தக் கேள்வி குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. ஹர்திக்கிற்காகப் பல அணிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஹர்திக்கை பரிமாற்றம் செய்வது குறித்த தனது கருத்தை அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார். அதில்,” ஹர்திக் கேகேஆர் அணியின் கேப்டன் ஆகக்கூடும். இந்த பரிமாற்றம் குறித்து விவாதிக்கும்போது, ​​ஹர்ஷித் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரிலும் யாரேனும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லலாம்.இருப்பினும், இந்த வீரர்களுக்குப் பதிலாக ஹர்திக் அணியில் சேர்க்கப்படுவதற்கான சாத்தியம் ஒரு நம்பிக்கையாக மட்டுமே உள்ளது. இந்த பரிமாற்றம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.” என்று தெரிவித்தார்ல்

மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணியிலா..?

ஹர்திக்கின் முன்னாள் அணியான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) தொடர்பாக அஸ்வின் ஒரு சுவாரஸ்யமான ஆலோசனையையும் வழங்கினார். அதில், “ஹர்திக்கிற்குப் பதிலாக ரஷீத் கானை மும்பை இந்தியன்ஸுக்கு குஜராத் பரிமாற்றம் செய்யலாம். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாம் கர்ரன் போன்ற வீரர்கள் சாத்தியமான தேர்வுகளாக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டார். அஷ்வினின் கூற்றுப்படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு இந்திய விக்கெட் கீப்பர் தேவைப்படுவதுடன், அவர்கள் தங்களது பந்துவீச்சையும் வலுப்படுத்த விரும்புகிறார்கள்.

ALSO READ: பொல்லார்ட்க்கு பெருமை சேர்த்த தருணம்.. பயிற்சியாளராக நியமித்த மும்பை இந்தியன்ஸ்!

ஹர்திக்கை வாங்க போட்டியிடும் 5 அணிகள்:

ஹர்திக்கை வாங்குவதற்கான சாத்தியமான போட்டியாளர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்), குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய அணிகளின் பெயர்களை அஸ்வின் குறிப்பிட்டார். இருப்பினும், ஹர்திக் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகுவாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Follow Us