AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: 2027 உலகக் கோப்பையில் விளையாடவே விருப்பம்.. மனம் உருகி பேசிய ரோஹித் சர்மா!

Rohit Sharma on ODI Future: ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற யூகங்களுக்கு மத்தியில், அவர் 2027 உலகக் கோப்பையில் சுப்மன் கில் தலைமையில் விளையாட விரும்புவதாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ரோஹித், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

Team India: 2027 உலகக் கோப்பையில் விளையாடவே விருப்பம்.. மனம் உருகி பேசிய ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Oct 2026 18:31 PM IST

முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) ஏற்கனவே சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது இந்தியாவுக்காக (Indian Cricket Team) ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சமீப காலமாக, 2027 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவை பரிசீலிக்கவில்லை என்று பரவலான யூகங்கள் நிலவி வந்தன. இதனால், ரோஹித் விரைவில் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறக்கூடும் என்ற யூகங்களுக்கும் வழிவகுத்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஃபார்மில் இருந்த ரோஹித், தற்போது நியூசிலாந்து தொடருக்காகக் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறார். இதற்கிடையில், ரோஹித் சர்மா சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

ALSO READ:  சீம் பிட்ச்சில் சதம்.. அபிஷேக் அதிரடியை பார்த்து வியந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

கடந்த 2025ம் ஆண்டு ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். சுப்மன் கில், 2027 ஒருநாள் உலகக் கோப்பையிலும் அணியை வழிநடத்துவார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோஹித் சிறப்பாகச் செயல்படாதபோது, ​​ஒரு செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மா பரிசீலிக்கப்படவில்லை என்று ஓர் அதிகாரி தெரிவித்ததால், லார்ட்ஸில் நடைபெறும் போட்டிக்குப் பிறகு ரோஹித் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என்று வதந்தி பரவியது. இருப்பினும், பிசிசிஐ அந்த நேரத்தில் அந்தச் செய்திகளை மறுத்தது.

ரோஹித் சர்மாவின் வீடியோ வைரல்:


ரோஹித் சர்மாவின் வைரலான வீடியோ, அவருடைய சொந்த நிகழ்ச்சியான ‘ஃபேமிலி ஃபுல் ஹவுஸ் வித் ரோஹித் சர்மா’வில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில், “அவசர காலத்தில் நீங்கள் யாரை அழைப்பீர்கள், சுப்மன் கில்லையா அல்லது ஸ்ரேயாஸ் ஐயரையா?” என்று ரோஹித்திடம் கேட்கப்பட்டபோது, ​​ரோஹித் சர்மா, “இருவருமே கேப்டன்கள். தற்போது சுப்மன் கில் தான் என் கேப்டன். நான் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். நான் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

ALSO READ: இந்திய அணிக்கு லக்! நியூசிலாந்து அணிக்கு ஜர்க்! ஆக்லாந்து ஸ்டேடியத்தில் இதுவரை யார் ஆதிக்கம்?

பின்னர் ரோஹித் நகைச்சுவையாக, “2027ம் ஆண்டுக்கு பிறகு டி20-யில் மீண்டும் களமிறங்க விரும்பினால், ஷ்ரேயாஸ் ஐயரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார். அவரது கேப்டன்சியின் கீழ் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதும், அதன் பிறகு ரோஹித் சர்மா டி20 வடிவத்திலிருந்து ஓய்வு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow Us