WPL 2027: டெல்லி அணியில் 15 வயது வீராங்கனை.. WPL வரலாற்றில் உமா காஷ்வி புது சாதனை!
WPL 2027 Auction: மகளிர் பிரீமியர் லீக் ஏல வரலாற்றில் 15 வயதான உமா காஷ்வி மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் இவரை வாங்கியது. கர்நாடகாவைச் சேர்ந்த இவர், தனது சிறப்பான பேட்டிங் மற்றும் தலைமைப் பண்புகளால் அனைவரையும் கவர்ந்தார். 530 போட்டிகளில் 13,000 ரன்களுக்கு மேல் குவித்து, ஏலத்திற்கு முன்பே கவனம் ஈர்த்தவர்.
மகளிர் பிரீமியர் லீக் ஏல (WPL 2027) வரலாற்றில் விற்கப்பட்ட மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமையை உமா காஷ்வி பெற்றுள்ளார். அவரது அடிப்படை விலையான ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் அவர் வாங்கப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான உமா, ஏலத்திற்கு முன்பே தனது வயது காரணமாக செய்திகளில் இடம்பிடித்திருந்தார். 2011ம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி பிறந்த அவருக்கு, தற்போது 15 வயதே ஆகிறது.
ALSO READ: ஏலத்தில் அதிக விலைக்கு போன மோலினக்ஸ்.. விற்கப்பட்ட வீராங்கனைகளின் முழு பட்டியல்!




யார் இந்த உமா காஷ்வி..?
𝗬𝗢𝗨𝗡𝗚𝗘𝗦𝗧 𝗣𝗟𝗔𝗬𝗘𝗥 𝗦𝗢𝗟𝗗 IN #TATAWPLAuction HISTORY 🙌
1️⃣5️⃣-year-old Uma Kashvi goes to @DelhiCapitals for INR 10 lakh! 💙
#TATAWPL https://t.co/rwIHfVA9e7
— Women’s Premier League (WPL) (@wplt20) October 28, 2026
15 வயதே ஆன உமா காஷ்வி, ஏலத்திற்கு முன்பு விவாதப் பொருளாக இருந்தார். வைபவ் சூர்யவன்ஷியும் இளம் வயதிலேயே லீக் கிரிக்கெட்டில் நுழைந்து, 15 வயதில் தேசிய அணியில் இடம்பிடித்தார். இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டபோது வைபவிற்கு 14 வயதுதான் ஆகியிருந்தது. சமீபத்தில் முடிவடைந்த பிசிசிஐ மகளிர் 15 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் உமா காஷ்வி அதிக ரன்களைக் குவித்தார். இதில், 3 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடித்து, 172 சராசரியில் 516 ரன்களைக் குவித்தார்.
கர்நாடகாவில் பல்வேறு வயதுப் பிரிவுகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் உமா காஷ்வி நூற்றுக்கணக்கான ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பதிலிருந்து அவரது பேட்டிங் செயல்திறனை தெரிந்து கொள்ளலாம். கிடைத்த தகவலின்படி, உமா காஷ்வி 530 போட்டிகளில் 13,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதில், 24 சதங்களையும் 68 அரை சதங்களையும் அடித்துள்ளார்.
கேப்டன் அனுபவமும் உண்டு..
உமா காஷ்வி தனது பேட்டிங்கால் மட்டுமல்ல, தலைமைப் பண்புகளாலும் அனைவரையும் கவர்ந்துள்ளார். காஷ்வி கர்நாடகா 15 வயதுக்குட்பட்டோர் அணிக்குத் தலைமை தாங்கியதுடன், மகாராணி கோப்பையில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியையும் வழிநடத்தியுள்ளார். மேலும், உள்ளூர் கிரிக்கெட்டில், காஷ்வி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 கோப்பையை வென்றுள்ளார். மேலும், 19 வயதுக்குட்பட்ட மகளிர் ஒருநாள் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறிய கர்நாடக அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் யார்..?
மகளிர் பிரீமியர் லீக் 2027-க்கான ஏலம் இன்று அதாவது 2026 அக்டோபர் 28ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இதில் 5 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 27 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணியிடம் இருந்த அதிகபட்ச ஏலத்தொகையை அவர்கள் ஏலத்தில் பயன்படுத்திக்கொண்டனர். அவர்கள் மொத்தம் ஆறு வீராங்கனைகளை வாங்கியதுடன், ஏலத்தில் அதிகபட்ச தொகையையும் கோரினர். உத்தரப் பிரதேச அணி, சோஃபி மோலினக்ஸை ரூ.1.10 கோடிக்கு வாங்கியது. மேலும், கிரேஸ் ஹாரிஸ் மீது வேறு எந்த அணியும் ஆர்வம் காட்டாத நிலையில், அவரை அவரது அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்கு வாங்கியது.
ALSO READ: மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலம்.. வெளியான 146 வீராங்கனைகள் பட்டியல்..!
சோஃபி மோலினக்ஸுக்குப் பிறகு, அதிக விலைக்கு விற்கப்பட்ட அடுத்த வீரர் கிரண் நவகிரே ஆவார். இவரை 75 லட்சத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குச் சென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியும் நவகிரே மீது ஆர்வம் காட்டி, ரூ. 70 லட்சத்திற்கு ஏலம் கேட்டது. இருப்பினும், டெல்லி அணி ரூ. 75 லட்சத்திற்கு எட்டியபோது, மும்பை அணி பின்வாங்கியது.