AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

WPL 2027: மகளிர் ப்ரீமியம் லீக் போட்டிகள் எப்போது தொடங்கும்? வெளியான அறிவிப்பு

WPL 2027 Dates Announced : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகளிர் பிரீமியர் லீக்கின் 5து சீசனுக்கான களம் தயாராகிவிட்டது. இத்தொடர் 2027 ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.

WPL 2027:  மகளிர் ப்ரீமியம் லீக் போட்டிகள் எப்போது தொடங்கும்? வெளியான அறிவிப்பு
Wpl 2027
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 Sep 2026 19:50 PM IST

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகளிர் பிரீமியர் லீக்கின் 5து சீசனுக்கான களம் தயாராகிவிட்டது. இத்தொடர் 2027 ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏலத் தேதிகள் மற்றும் முக்கிய விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அணிகள் தங்கள் ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மகளிர் ப்ரீமியம் லீக் போட்டிகள் எப்போது தொடங்கும்?

மகளிர் பிரீமியர் லீக்கின்ஐந்தாவது சீசனுக்கான அட்டவணையைபிசிசிஐ செப்டம்பர் 16, 2026 இன்றுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாபெரும் தொடர் 2027 ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் அக்டோபர் 28 அன்று கொச்சியில் நடைபெறும். இருப்பினும், போட்டிகள் நடைபெறும் நகரங்கள் குறித்த விவரங்களை வாரியம் இன்னும் வெளியிடவில்லை.

இதையும் படிக்க : IND vs AFG: சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை மெய்டன்.. முதலிடத்தை தொட்ட பும்ரா!

மகளிர் கிரிக்கெட்டில் முதன்மையான டி20 லீக்காக உருவெடுத்துள்ள இத்தொடர், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளையும் வளர்ந்து வரும் திறமையாளர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து, உயர்தர ஆட்டங்களை ஊக்குவிப்பதாக பிசிசிஐ தனது சிறப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகளுக்கான அறிவிப்பு

 

போட்டியில் பங்கேற்கும் ஐந்து அணிகளுக்கும் பிசிசிஐ ஒரு முக்கியமான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. தற்போதைய அணிகளின் அடிப்படையில் வீராங்கனைகளைத் தக்கவைக்கும் செயல்முறைக்கான இறுதித் தேதியாக செப்டம்பர் 28 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் சீசனுக்காகத் தங்கள் அணிகளை வலுப்படுத்தும் வகையில், ஏற்கனவே உள்ள அணியிலிருந்து வீராங்கனைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தக் காலக்கெடு முடிந்த பின்னரே, இறுதி அணிப் பட்டியல்கள் குறித்த தெளிவு கிடைக்கும்.

இதையும் படிக்க : Asian Games 2026: கிரிக்கெட் முதல் மல்யுத்தம் வரை.. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய தடகள வீரர்களின் அட்டவணை!

முந்தைய சீசனில், நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது இரண்டாவது கோப்பையைக் கைப்பற்றியது. அந்தச் சீசனுக்கான போட்டிகள் நவி மும்பை மற்றும் பரோடாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

கடந்த 2023 ஆம் ஆண்டில் இத்தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவ்விரு அணிகளும் தலா இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளன. புதிய சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏலத்தில் சிறந்த வீராங்கனைகளைத் தங்கள் அணியில் இணைப்பதற்கான உத்திகளை அணி நிர்வாகங்கள் வகுத்து வருகின்றன.

Follow Us