Asian Games 2026: கிரிக்கெட் முதல் மல்யுத்தம் வரை.. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய தடகள வீரர்களின் அட்டவணை!
Indian Athletes Schedule: கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி வருகின்ற செப்டம்பர் 18ம் தேதி ஜப்பானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியுடன் தங்களது பயணத்தைத் தொடங்கும். அதில் வெற்றி பெற்றால், அரையிறுதிப் போட்டிகளில் 2026 செப்டம்பர் 20 அன்றும், தங்க பதக்கப் போட்டிகள் 2026 செப்டம்பர் 22 அன்றும் நடைபெறும்.
2026 ஆசிய விளையாட்டு போட்டிகளில் (2026 Asian Games) இந்திய வீரர்கள் வருகின்ற 2026 செப்டம்பர் 17ம் தேதி முதல் விளையாடவுள்ளது. ஜப்பானின் ஐச்சி நகோயாவில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா வருகின்ற 2026 செப்டம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும். இருப்பினும், டெக்பால் பிரிவில் இந்தியாவின் முதல் போட்டி செப்டம்பர் 17 அன்றே நடைபெறும். இதன் பொருள், இந்திய வீரர்களின் போட்டியை காண இந்திய ரசிகர்கள் தொடக்க விழா வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி (Indian Athletes) 107 பதக்கங்களை வென்றது. இம்முறை, இந்தியா 35 விளையாட்டுகளில் 508 வீரர்களுடன் பங்கேற்கிறது. தடகளத்தை பொறுத்தவரை 79 வீரர்களுடன் மிகப்பெரிய இந்திய அணியாக இது விளங்குகிறது. இதைத் தொடர்ந்து ஹாக்கியில் 40 பேரும், கிரிக்கெட் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் தலா 30 பேரும் பங்கேற்கின்றனர்.
ALSO READ: இந்திய அணியின் போட்டி நேரங்கள் மாற்றம்.. காரணம் என்ன?
ஹாக்கி அட்டவணை:
ஆடவர் ஹாக்கி அணி தனது பயணத்தை வருகின்ற 2026 செப்டம்பர் 20ம் தேதி இந்தோனேசியாவுக்கு எதிராகத் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து இலங்கை, தென் கொரியா, ஜப்பான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடும். இதன் அரையிறுதிப் போட்டிகள் வருகின்ற 2026 அக்டோபர் 1 ஆம் தேதியும், இறுதிப் போட்டி 2026 அக்டோபர் 3ம் தேதியும் நடைபெறும். மகளிர் அணியும் தனது முதல் போட்டியை 2026 செப்டம்பர் 20 ஆம் தேதி உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. அரையிறுதிப் போட்டிகள் 2026 செப்டம்பர் 30ம் தேதியும், தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டி 2026 அக்டோபர் 2ம் தேதியும் நடைபெறும்.




கிரிக்கெட் அட்டவணை:
கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி வருகின்ற செப்டம்பர் 18ம் தேதி ஜப்பானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியுடன் தங்களது பயணத்தைத் தொடங்கும். அதில் வெற்றி பெற்றால், அரையிறுதிப் போட்டிகளில் 2026 செப்டம்பர் 20 அன்றும், தங்க பதக்கப் போட்டிகள் 2026 செப்டம்பர் 22 அன்றும் நடைபெறும். ஆடவர் அணி நேரடியாக காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் வருகின்ற 2026 செப்டம்பர் 28 அன்று போட்டியிடும். ஆடவர் அரையிறுதிப் போட்டிகள் வருகின்ற 2026 அக்டோபர் 1 அன்றும், இறுதிப் போட்டி 2026 அக்டோபர் 3 அன்றும் நடைபெறும்.
கபடி முதல் மல்யுத்தம் வரை:
கபடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான போட்டிகள் வருகின்ற 2026 செப்டம்பர் 21 அன்று தொடங்கும். அரையிறுதிப் போட்டிகள் 2026 செப்டம்பர் 25 அன்றும், இறுதிப் போட்டிகள் 2026 செப்டம்பர் 26 அன்றும் நடைபெறும். பேட்மிண்டன் அணிப் போட்டிகள் 2026 செப்டம்பர் 20 முதல் 24 வரையிலும், அதனைத் தொடர்ந்து தனிநபர் போட்டிகள் 2026 செப்டம்பர் 25 முதல் 29 வரையிலும் நடைபெறும்.
ALSO READ: ஜப்பான் செல்ல விசாவால் தாமதம்.. சிக்கி தவிக்கும் இந்திய தடகள வீரர்கள்..!
இதன் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் 2026 செப்டம்பர் 20 முதல் 2026 அக்டோபர் 1 வரை நடைபெறும். தடகளப் போட்டிகள் 2026 செப்டம்பர் 24 முதல் 29 வரை தொடரும். குத்துச்சண்டை 2026 செப்டம்பர் 21 முதல் 2026 அக்டோபர் 2 வரையிலும், வில்வித்தை 2026 செப்டம்பர் 26 முதல் 2026 அக்டோபர் 3 வரையிலும், மல்யுத்தம் 2026 செப்டம்பர் 30 முதல் 2026 அக்டோபர் 3 வரையிலும் நடைபெறும். இந்திய விளையாட்டு வீரர்கள் படகோட்டம், மேசைப்பந்து, ஸ்குவாஷ், டென்னிஸ், சைக்கிளிங், குதிரையேற்றம் மற்றும் பிற விளையாட்டுகளிலும் பதக்கங்களுக்காகப் போட்டியிடுவார்கள்.