AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ : 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் – இந்தியாவுக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

IND vs NZ 1st ODI : பந்துவீச்சாளர்களின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல், நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களுக்குச் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) 4 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

IND vs NZ : 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் – இந்தியாவுக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
விராட் கோலி - அர்ஷ்தீப் சிங்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Nov 2026 11:44 AM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக பந்துவீச்சாளர்களின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல், நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதன் விளைவாக, நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களுக்குச் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) 4 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இந்திய அணிக்கு 186 ரன்கள் இலக்கு

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். குர்னூர் பிரார் மூன்று விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால், இந்தியாவுக்கு 186 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படிக்க : Team India: பிரசித் கிருஷ்ணாவுக்கு காயம் நீங்கி விளையாட தகுதி.. நியூசிலாந்து தொடரில் விளையாடுவாரா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீசத் தீர்மானித்தது. மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஆட்டம் தொடங்கியதும் நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அளித்த அதிர்ச்சியில் இருந்து அந்த அணிய மீளவே இல்லை.

சீஃபர்ட் மற்றும் பிலிப்ஸ் முயற்சி வீண்

நியூசிலாந்து தரப்பில், டிம் சீஃபர்ட் 43 பந்துகளில் 38 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 51 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர். டேரில் மிட்செல் 41 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இன்னிங்ஸின் இறுதியில், பிளேர் டிக்னர் அதிரடியாகச் செயல்பட்டு 23 பந்துகளில் 34 ரன்களைக் குவித்தார். இதில் நான்கு சிக்ஸர்கள் அடங்கும். ஜேக்கப் டஃபி 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிரடி காட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்

அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் 70 ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். குர்னூர் பிரார் 9.2 ஓவர்களில் 44 ரன்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அன்ஷுல் கம்போஜ் தனது 10 ஓவர்களில் வெறும் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்; குறிப்பாக, அவர் இரண்டு மெய்டன் ஓவர்களை வீசினார். அக்சர் படேல் தனது ஐந்து ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதையும் படிக்க : IND vs NZ: கடைசி 2 ஒருநாள் போட்டியில் விளையாடாதது ஏன்..? கேப்டன் கில் விளக்கம்!

இந்த நிலையில் இந்தியா வெற்றி பெற 186 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் களமிறங்க இருப்பதால், இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் காட்டிய அதிரடியை பேட்மேன்களும் மேற்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 

Follow Us