AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2025 தீபாவளி.. ரூ.1 லட்சத்திற்கு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

Gold Return Calculation From 2025 Diwali | தங்கம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு தீபாவளியின்போது தங்கத்தில் முதலீடு செய்து இருந்தால், 2026-ல் தங்கம் விலை எத்தகைய வளர்ச்சியை சந்தித்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

2025 தீபாவளி.. ரூ.1 லட்சத்திற்கு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Nov 2026 12:10 PM IST

என்னதான் பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்கள் இருந்தாலும், பெரும்பாலான இந்திய பொதுமக்களின் முதன்மை தேர்வாக உள்ளது தங்கம் (Gold) தான். கையில் கொஞம் பணம் இருந்தாலும் அதனை தங்கத்தில் முதலீடு செய்யதான் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்கத்தின் விலை ஒவ்வொரு ஆண்டும் உயர்வை சந்தித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தங்கம் மிக கடுமையான உயர்வை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. ஆனால், இந்த ஆண்டு தங்கத்திற்கு சிறந்ததாக அமையவில்லை.

காரணம், இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தை தொட்ட தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்திக்க தொடங்கியது. குறிப்பாக தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 2025 தீபாவளிக்கு ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால், இந்த ஆண்டு அதன் மதிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : கடந்த ஆண்டு சாதனையை முறியடித்த அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வசூல்.. தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,460 கோடி நிதி பகிர்வு!

கடந்த ஆண்டு தீபாவளியில் தங்கம் விலை நிலவரம்

2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் 24 காரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூ.13,091-க்கும், 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் தான் தங்கம் படிப்படியாக விலை உயர்வை சந்தித்து ஜனவரி மாதத்தில் உச்சத்தில் சந்தித்தது. இந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் குறைவாகவே உள்ளது.

இதையும் படிங்க : பராமரிப்பு கம்மி.. மைலேஜ் அதிகம்.. ரூ.6 லட்சம் பட்ஜெட்டுக்குள் சிறந்த 5 கார்கள் இவைதான்

கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் தங்கம் வாங்கினால் எவ்வளவு கிடைக்கும்?

நீங்கள் 2025 ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் கொடுத்து தங்கம் வாங்கியிருந்தால், உங்கள் முதலீட்டின் மதிப்பு 2026 ஜனவரி மாதத்தில் 40 சதவீதம் உயர்வை கண்டு இருக்கும். அதன் மூலம் தங்கத்தின் விலை ரூ.1,40,000 ஆக இருந்திருக்கும். ஆனால், தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரிக்கு பிறகு தங்கம் விலை குறைந்தாலும் 6.5 சதவீதம் லாபத்தை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் என்பது சிறந்த முதலீடு தான், ஆனால் தங்கத்தை குறுகிய காலத்துக்கு முதலீடு செய்யாமல் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல லாபத்தை பெற முடியும் என பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us