AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யும் ஆர்பிஐ.. ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்!

India's New Plastic Rupee Notes | இந்தியாவில் தற்போது காகிதத்தால் ஆன ரூபாய் நோட்டுக்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தான், இந்திய ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யும் ஆர்பிஐ.. ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Nov 2026 00:54 AM IST

இந்தியாவில் தற்போது ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்த ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் குறித்த முக்கிய அப்டேட் மற்றும் மாற்றங்களை  இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான், ரூபாய் நோட்டுக்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை (Plastic Rupee Notes) வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிளாஸ்டிக் நோட்டுகள் – வங்கிகளுக்கு செலவு மிச்சம்

தற்போது புழக்கத்தில் உள்ள 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுக்களை போலவே தான் இந்திய ரிசர்வ் வங்கி தனது புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் காரணமாக இந்த புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களை வடிவமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே, வங்கிகளுக்கு இதன் மூலம் செலவு மிச்சமாகும். புதிய வடிவிலான ரூபாய் நோட்டுகளுக்கு, ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், இதில் அதற்கான அவசியம் இல்லை.

இதையும் படிங்க : அக்டோபரில் 5 லட்சம் கார்கள் விற்பனை.. முதல் 3 இடங்கள் எந்த நிறுவனம் தெரியுமா?

புதிய பாலிமர் நோட்டுகளின் சிறப்புகள் என்ன என்ன?

தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் மிக எளிதில் சேதமடையக்கூடியவை. ஆனால், பாலிமர் நோட்டுகள் நாணயங்களை போலவே நீண்ட நாட்களுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் இருக்கும். இது குறித்து பேசிய இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, சில நாடுகள் பாலிமர் நோட்டுகளை சுமார் 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கடந்த ஆண்டு சாதனையை முறியடித்த அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வசூல்.. தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,460 கோடி நிதி பகிர்வு!

ரூ.200 கோடிக்கு பாலிமர் நோட்டுகள்

முதற்கட்டமாக ரூ.100 கோடிக்கு 10 ரூபாய் பாலிமர் நோட்டுகளையும், ரூ.200 கோடிக்கு 20 ரூபாய் நோட்டுகளையும் அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us