AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய் – காவலர்களிடம் கேள்வி

CM Vijay Surprise Inspection : தமிழக முதல்வர் விஜய் நவம்பர் 3, 2026 இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். இதனையடுத்து கோயம்புத்தூர் விமான நிலையத்துக்கு திரும்பும்போது கருமத்தம்பட்டி காவல் நிலையித்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய் – காவலர்களிடம் கேள்வி
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Nov 2026 20:48 PM IST

கோயம்புத்தூர், நவம்பர் 3 : ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நவம்பர் 3, 2026 இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையத்துக்கு சென்றார். இந்த நிலையில் திடீரென கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையம் சென்ற அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் நவம்பர் 3, 2026 இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் முதல்வர் விஜய் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 26 ஆயிரம் பேருக்கு ரூ.3 ஆயிரம் கோடி வங்கி நிதி இணைப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையத்துக்குப் புறப்பட்டார்.

இதையும் படிக்க : ரயிலில் பகலில் தூங்கலாமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இந்த நிலையில் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்குச் செல்லுமாறு முதல்வர் விஜய் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதல்வரின் வாகனம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்குள் சென்றது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் முதல்வர் விஜய் நேரடியாக காவல் நிலையத்துக்கு வந்ததால் அங்கிருந்த காவல்துறையினர் ஆச்சரியமடைந்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்துக்குள் சென்ற முதல்வர் விஜய், அங்குள்ள பல்வேறு அறைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணனின் அறைக்கு சென்ற முதல்வர், காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணனிடம் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு, மேற்கு மண்டல ஐஜி ரம்யாபாரதி மற்றும் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படிக்க : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு – பெருந்துறையில் முதல்வர் விஜய்

குழந்தைக்கு விஜய் என பெயரிட்ட முதல்வர்

இதற்கிடையே சேலத்தை சேர்ந்த பூஜாஸ்ரீ என்ற பெண், தனது 3 மாதக் குழந்தையுடன் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே முதல்வர் விஜய்யை சந்திக்க காத்திருந்தார். தனது குழந்தைக்கு முதல்வர் விஜய் பெயர் வைக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிலையில் பெருந்துறை நோக்கி சென்ற முதல்வர் விஜய், அவரை சந்திக்காததால் வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விழாவை முடித்துக்கொண்டு திரும்பிய முதல்வர் விஜய், பூஜா ஸ்ரீயை அழைத்து குழந்தைக்கு தனது பெயரான விஜய் என பெயரிட்டார். பின்னர் குழந்தையின் விரலில் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Follow Us