சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் அடுத்த பிளான் – வெளியான வீடியோ – அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?
Sivakarthikeyan Announces New Wing : நடிகர் சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கத்தின் கீழ், புதிதாக கலை, இலக்கிய, பண்பாட்டுப் பிரிவு தொடங்கப்படுவதாக, வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அரசியல் வருகையின் முன்னோட்டமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
சென்னை, நவம்பர் 3 : தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, சந்தித்த முதல் தேர்தலிலேயே வென்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன் வரிசையில் தமிழ் திரையுலகில் இருந்து விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டது இந்திய அளவில் கவனம் பெற்றது. இதனையடுத்து முதல்வர் விஜய்யின் வழியில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஆகியோர் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் அடுத்த பிளான்
சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக அறிவித்த தனுஷ் தனது கட்சிக்கு பிரத்யேக கொடியையும் அறிவித்தார். மேலும் தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளையும் முதல்வர் விஜய் சந்தித்தததுடன் அவர்களுக்கு வெள்ளி பொருட்களையும் பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து தனது நற்பணி இயக்கத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக பிரத்யேக டியூசன் சென்டர், மற்றும் வழக்கறிஞர் அணியை உருவாக்குவது என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : மதுரையில் ரவுடி ‘குட்டி சாக்கு’ சூர்யா கொடூரக் கொலை.. 12 மணி நேரத்தில் 5 பேரை தட்டி தூக்கிய போலீசார்!!
இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கத்தின் கீழ், புதிதாக கலை, இலக்கிய, பண்பாட்டுப் பிரிவு தொடங்கப்படுவதாக, வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் பரபரப்பாக எழுந்துள்ள நேரத்தில், சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், திரையுலக வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் இது கவனம் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்றங்களை ஏற்கெனவே ஒருங்கிணைந்த நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் அவரது ரசிகர்கள் ரத்த தானம், கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2026 அக்டோபரில் சென்னையில் நடைபெற்ற நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. அதில் பங்கேற்ற ரசிகர்கள், அரசியல் மாநாட்டுக்கு வருவது போல வெள்ளைச் சட்டை அணிந்து வந்திருந்தது பேசுபொருளானது.
வைரலாகும் வீடியோ
நமது வரலாற்றை அறிவோம்! ❤️👍
#SK #SKNI https://t.co/FAU8KStOFL
— All India SKFC (@AllIndiaSKFC) November 2, 2026
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் கீழ் கலை, இலக்கிய, பண்பாட்டுப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்தப் புதிய பிரிவின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து சிவகார்த்திகேயன் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
நடிகர் தனுஷின் நற்பணி இயக்கம் அண்மையில் அடுத்தடுத்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளதால், சமூக வலைதளங்களில் இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். தனுஷுக்கு முன்பாகவே அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடா இது என்ற கேள்வியையும் சில ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிக்க : வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்.. வங்கிக் கணக்கும் முடக்கம்!
திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த விஜய்யும் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி அதற்கென பிரத்யேக கொடியையும் வெளியிட்டார். மேலும் இலங்கை போர் உச்தத்தில் இருந்தபோது அதற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டது, ஜல்லிக்கட்டு போராட்டம் என தொடர்ந்து அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் தேசிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்ததும் பேசுபொருளாகியது.
அவரது படங்களுக்கு அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளும் அவரது அரசியல் வருகைக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவரது வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோரின் செயல்பாடுகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன.


