Arjun Das: இன்வஸ்டிகேஷன் க்ரைம் திரில்லர்.. அர்ஜுன்தாஸின் ஜான் டே படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
John Doe Movie Trailer: தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் அர்ஜுன் தாஸ். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் இவர் ஜான் டே என்ற படத்தில் நடித்துவந்த நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கோலிவுட் மக்கள் மத்தில் இளம் நடிகராக மிகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் அர்ஜுன்தாஸ் (Arjundas). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்ஸ் மோர் (Once More Movie) . இந்த படத்தில் அர்ஜுன்தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு புது புது திரைப்படங்களில் நடிகர் அர்ஜுன்தாஸ் ஒப்பந்தமாகி நடித்துவந்தார். இயக்குநர் மதுமிதா (Director Madhumita) இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடித்துவந்த திரைப்படம்தான் ஜான் டே (John Doe Movie). இந்த படத்தில் அர்ஜுன்தாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருடன் சச்சனா நட்சாரன் (Sanchana Natarajan), சாரா (Zaara Vineet) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது வரும் 2026 நவம்பர் 14ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், தற்போது இந்த திரைப்படத்திலிருந்து அதிரடி ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரை இயக்குநரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.




இதையும் படிங்க: விஷுவல் ட்ரீட்… மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து வெளியான மஹாசக்தி ட்ரான்ஸ் வீடியோ!
இயக்குநர் பா. ரஞ்சித் பகிர்ந்து அர்ஜுன்தாஸின் ஜான் டே பட ட்ரெய்லர் குறித்த பதிவு:
Here is the trailer of #JohnDoe releasing on 13th Nov 2026.
Written & Directed by @memadhumita
Produced by @arkamediaworks @devineni_prasad @Shobu_
Presented by @agscinemas congratulations to all ❤️❤️❤️
@archanakalpathi @iam_arjundas @sanchana_n @srish_singh @zaaravchandhoke @proyuvraaj https://t.co/NajM1IntEl
— pa.ranjith (@beemji) November 3, 2026
போலீஸ் அதிகாரியாக அர்ஜுன்தாஸ் நடித்த ஜான் டே பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:
தற்போது வெளியாகியுள்ள ஜான் டே ட்ரெய்லரில், துபாயிலிருந்து ஒரு பேமிலி இந்தியாவிற்கு வந்துள்ளது. அந்த குடும்பத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மக்கள் இருக்கிறார்கள். அதில் அந்த மகனும், மக்களும் கடைக்கு ஒன்றாக சென்ற நிலையில், அதில் அந்த மகன் எப்படியோ தொலைந்துவிடுகிறான். அந்த சிறுவனை கண்டுபிடிக்க சாச்சனா மற்றும் அர்ஜுன்தாஸ் இந்த விசாரணையில் ஈடுபடுகின்றனர். அந்த குழந்தை மாயமானது எப்படி.. இந்த குற்றத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்த கதைக்களத்தில் இந்த படம் நகர்வதாக இந்த ட்ரெய்லரில் தெரிகிறது.
இதையும் படிங்க: என்னுடன் 3 படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.. நஸ்ரியா குறித்து பேசிய சூர்யா!
தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் கிட்டதட்ட மினி ஹாலிவுட் படம் போலவே தெரிகிறது. இந்த படத்தில் வில்லனாக இருப்பது அர்ஜுன்தாஸா? அல்லது சச்சனா நட்ராஜனா? என்பதே இப்படத்தின் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது. தற்போது இந்த ட்ரெய்லர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இப்படம் வரும் 2026 நவம்பர் 13ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.