AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

க்ரைம் த்ரில்லர் பாணியில் அர்ஜுன் தாஸின் புது படத்தின் டைட்டில் இதுதான் – வைரலாகும் அப்டேட்

Actor Arjun Das New Movie Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

க்ரைம் த்ரில்லர் பாணியில் அர்ஜுன் தாஸின் புது படத்தின் டைட்டில் இதுதான் – வைரலாகும் அப்டேட்
ஜான் டோ படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Oct 2026 06:15 AM IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. வில்லனாக தமிழக மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகும் தொடர்ந்து வில்லனாக நடிப்பதை தவிர்க்காமல் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் வெள்ளித்திரையில் படங்களில் மட்டும் இன்றி ஓடிடியில் இணையதள தொடர்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் இணைந்து நடித்த லவ் என்ற இணையதள தொடர் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் என்ன என்பது குறித்தும் அதன் டைட்டில் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அர்ஜுன் தாஸின் புது படத்தின் டைட்டில் இதுதான்:

அதன்படி நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்போது ஜான் டோ என்று பெயர் வைத்துள்ளனர். இயக்குநர் மதுமிதா இந்தப் படத்தினை எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து நடிகர்கள் சஞ்சனா நடராஜன், மற்றும் சிருஷ்டி ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரும் அதனை உறுதி செய்யும் வகையில் டார்க்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read…. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராகவ்? என்ன காரணம்

ஜான் டோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தியேட்டரில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் 2… படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!

Follow Us