AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த கதாப்பாத்திரங்களுக்கு நிறைய நோ சொல்லிவிட்டேன் – நடிகர் அர்ஜுன் தாஸ்

Arjun Das Recent Interview | தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தான் அதிக அளவில் நோ சொன்ன கதாப்பாத்திரம் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த கதாப்பாத்திரங்களுக்கு நிறைய நோ சொல்லிவிட்டேன் – நடிகர் அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 22 Aug 2026 15:05 PM IST

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். நடிகர்கள் பொதுவாக அவர்களின் நடிப்பிற்காக அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். அதே வேலையில் நடிகர்களின் குரல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலமாவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி 90ஸ் கிட்ஸ்களிடையே அப்படி பிரபலமானவர் நடிகர் ரகுவரன். அவர் வில்லனாக பலப் படங்களில் ரசிகர்களிடையே மிரட்டும் வில்லனாக அவர் நடித்து இருந்தாலும் அவரது குரல் ஒட்டுமொத்த ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த நிலையில் தற்போதைய இளம் தலைமுறையினர் இடையே பிரபலமான நடிகராக வலம் வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் நடிப்பிற்கு பிரபலமாவதற்கு முன்னதாகவே அவரின் குரலால் மக்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்று தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் நாயகனாகவும் வில்லனாகவும் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஒன்ஸ் மோர். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த கதாப்பாத்திரங்களுக்கு நிறைய நோ சொல்லிவிட்டேன்:

எல்லோரும் எனக்கு எதிர்மறையான (வில்லன்) கதாபாத்திரங்களையே வழங்கிக்கொண்டிருந்தனர். நான் பலமுறை ‘வேண்டாம்’ என்று மறுத்தேன், அதற்குச் சிறிது காலமும் பிடித்தது. பிறகு, திடீரென்று எனக்கு ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றி நான் வெளிப்படையாகவே பேசுகிறேன்; தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இது என் நினைவுகளில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அஜித் சாரின் ஊழியராக இருந்த நிலையிலிருந்து, அவருக்கு எதிராக ஒரு வில்லனாக நிற்கும் நிலைக்கு உயர்ந்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

‘கைதி’ படத்தில் நான் காட்டியது போன்ற ஒரு தீவிரமான குணம் கொண்டவன் நான் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். என்னை நேரில் சந்திக்கும்போதுதான் என் உண்மையான சுபாவம் என்னவென்று உங்களுக்குத் தெரியும். நிஜ வாழ்க்கையிலும் நான் போதைப்பொருள் பயன்படுத்துபவனாக இருப்பேன் என்று நீங்கள் நினைத்தால், அதைப்பற்றி நான் ஒன்றும் செய்ய முடியாது.

Also Read… ஆர்.ஜே.பாலாஜி அடுத்து நாயகனாக நடிப்பது இவரின் இயக்கத்திலா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சியான் விக்ரமுடன் அடுத்த திரைப்படத்தை உறுதி செய்த விஷ்ணு எடவன்!

Follow Us