ஆர்.ஜே.பாலாஜி அடுத்து நாயகனாக நடிப்பது இவரின் இயக்கத்திலா? வைரலாகும் தகவல்
RJ Balaji Next Movie Update | தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் அடுத்ததாக நாயகனாக நடிக்க உள்ள படம் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ரேடியோவில் ஆர்ஜே.வாக தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நபராக வலம் வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோவில் ஆர்ஜேவாக பணியாற்றும் போதே தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த ஆர்.ஜே.பாலாஜி பிறகு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் காமெடியனாக நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. காமெடியனாக இவரை கொண்டாடிய தமிழ் சினிமா ரசிகர்கள் நாயகனாகவும் கொண்டாடத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நாயகனாக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி பிறகு அவரே இயக்கி நாயகனாக படங்களில் நடித்து வந்தார். நாயகன் இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வந்தார் ஆர்.ஜே.பாலாஜி.
இந்த நிலையில் இறுதியாக நடிகர் சூர்யாவை நாயனாக வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய படம் கருப்பு. இந்தப் படத்தி வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி நடித்து இருந்தார். இவரது சினிமா கெரியரில் அதிக வசூல் செய்த படமாக மாறியது கருப்பு. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி அடுத்து இயக்குநராக பணியாற்றுவாரா அல்லது நாயகனாக நடிப்பாரா என்று ரசிகர்களிடையே ஒரு கேள்வி எழுந்து வந்தது.
ஆர்.ஜே.பாலாஜி அடுத்து நாயகனாக நடிப்பது இவரின் இயக்கத்திலா?
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, கருப்பு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஆர்.ஜே. பாலாஜி சிறிது காலத்திற்கு இயக்கத்திலிருந்து விலகி இருக்கவிருப்பதாகத் தெரிகிறது. கிடாரி என்ற படம் மற்றும் மதகம் என்ற இணையதள தொடர் ஆகியவற்றை இயக்கிய பிரசாத் முருகேசனுடன் அவர் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.
Also Read… பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி.. வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
RJ Balaji’s next as a hero🎬
As per VP, after the grand success of #Karuppu, #RJBalaji will reportedly step away from direction for a short while.
He is said to be joining hands with director Prasath Murugesan, who previously delivered #Kidaari and the web series #Mathagam.… pic.twitter.com/eZSyonR03k
— Balaji (@RDBalaji) August 19, 2026
Also Read… அரசியல் வருகை குறித்து பேசிய சிலம்பரசன் – வைரலாகும் தகவல்



