AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்.. ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் முதலிடம்..!

Rishabh Pant Test Sixes Record: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தோரில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் உலக சாதனையை முறியடிக்க இன்னும் 30 சிக்ஸர்கள் மட்டுமே தேவை. அடுத்த நியூசிலாந்து டெஸ்டில் இந்த சாதனையை அவர் படைப்பாரா? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற இந்தப் போட்டி முக்கியமானது.

IND vs NZ: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்.. ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் முதலிடம்..!
ரிஷப் பண்ட்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Nov 2026 08:00 AM IST

வெலிங்டனில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து இடையிலான (IND vs NZ) முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான சதம் அடித்ததன் மூலம், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆனால், அதையும் தாண்டி, ரிஷப் பண்ட் இப்போது ஒரு சிறப்புப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க உள்ளார். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் (Rishabh Pant) அபாரமாக விளையாடி சதம் அடித்து, இந்திய அணியை ஒரு பெரிய ஸ்கோரை எட்ட வழிநடத்தினார்.

இந்திய அணியால் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியாமல், ஆட்டத்தை சமன் செய்ய நேர்ந்தது. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இனி வெற்றி பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். அதே சமயம், ரிஷப் பண்ட் சாதனைப் பதிவில் கவனம் செலுத்துவார்.

ALSO READ: இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி.. எப்போது, எங்கே பார்க்கலாம்..?

இன்னும் 30 சிக்ஸர் மட்டுமே தேவை:

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் மீண்டும் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, பண்ட் 30 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்து தனக்கென ஒரு பெயரை உருவாக்குவார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்ஸர்கள் அடித்ததற்கான சாதனை இதுவாகும். ரிஷப் பண்ட் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 108 சிக்ஸர்களை அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 138 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதேநேரத்தில், ரிஷப் பண்ட் இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், 108 சிக்ஸர்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்:

தரவரிசை வீரர் நாடு போட்டிகள் சிக்ஸர்கள்
1 பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 122 138
2 ரிஷப் பண்ட் இந்தியா 53 108
3 பிரெண்டன் மெக்கல்லம் நியூசிலாந்து 101 107
4 ஆடம் கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா 96 100
5 டிம் சௌதீ நியூசிலாந்து 107 98

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வருகின்ற 2026 நவம்பர் 27ம் தேதி ஹாக்லி ஓவல் மைதானத்தில் தொடங்கும். இந்த போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்த சாதனையை முறியடிக்க முடியும்.

ALSO READ: இந்திய அணியின் WTC 2027 இறுதிப் போட்டி வாய்ப்புகள்.. முழு தகுதிச் சுற்று சமன்பாடு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டுமானால், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

 

Follow Us